100 நாள் ஊரக வேலை திட்டத்தில் ஊழல்

 



மகாத்மா  காந்தி தேசிய  வேலை வாய்ப்பு  திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் 100 நாள் வேலை நடைபெற்று வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பற்ற கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கிடவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுமே இதன் முக்கிய நோக்கமாகும். ஆனால் இந்த திட்டத்தை பயன்படுத்தி சில பஞ்சாயத்து பணி தள  பொறுப்பாளர்கள், கிராம ஊராட்சி அலுவலர்  மற்றும் சில அரசு அதிகாரிகள் கோடி  கணக்கில் ஊழல் செய்துள்ளனர்.

100 நாள் வேலை திட்டம் ஊழல்

இந்த திட்டத்தின் மூலம் எந்த கிராமத்தில் எவ்வளவு ஊழல் நடந்துள்ளது என்ற விவரம் அரசினால் சமூக தணிக்கை செய்யப்பட்டு  அதன் விவரங்கள் அனைத்தும்  மத்திய அரசாங்கத்தின் அதிகார பூர்வ இணையதளமான https://nrega.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த கிராமங்களில் எவ்வளவு ஊழல் நடைபெற்றது மற்றும் இந்த ஊழலுக்கு யார் யார் பொறுப்பு என்ற விவரங்கள் உள்பட பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எந்தெந்த வழிகளில் ஊழல் நடைபெற்றது?

இந்த திட்டத்தை பயன்படுத்தி பல்வேறு வழிகளில் ஊழல் நடைபெற்றுள்ளது.

உதாரணத்திற்கு…

  • பணியாளர்கள் வேலை பார்த்த அளவினை அதிகமாக குறிப்பிட்டு அதிக ஊதியம் கொடுப்பது.
  • வேலைக்கு வராத பணியாளர்களுக்கு வேலைக்கு வந்தது போல் போலியான ஆவணங்கள் தயாரித்து ஊதியம் கொடுப்பது.
  • பணியாளர் அட்டை இல்லாதவர்களுக்கு போலியான ஆவணங்கள் தயார்செய்து பணிக்கு வந்ததாக ஊதியம் வழங்குவது.
  • நடைபெறாத வேலையை நடைபெற்றதாக காட்டி பணம் எடுப்பது. உதாரணத்திற்கு கண்மாய் தூர்வாராமலே தூர்வாரப்பட்டதாக கூறுவது.
  • இயந்திரங்களை கொண்டு வேலை பார்த்துவிட்டு அதை மனித வளத்தால் வேலை பார்த்ததாக கூறி அதிக செலவு கணக்கு காண்பிப்பது.

இது போன்று பல்வேறு வழிகளில் ஓலை நடைபெற்றுள்ளது. இவை அனைத்தையும் மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் ஊரில் 100 நாள் ஊழலை எவ்வாறு கண்டுபிடிப்பது?

மாதமா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்ள அணைத்து தகவல்களும்  மத்திய அரசின் இணையதளமான https://nrega.nic.in

அதில் State ல் உங்களது மாநிலம் District ல் உங்களது மாவட்டம் Block ல் உங்களது ஊராட்சி ஒன்றியத்தையும் Panchayath ல் உங்காத்து கிராமப் பஞ்சாயத்தையும் தேர்வு செய்து கொண்டு உங்களுக்கு தேவையான ந்தகவல்களை ஆண்டு வாரியாக பெற்றுக்கொள்ளலாம். 

இந்த திட்டத்தின் மூலம் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டதை விட சில  பஞ்சாயத்து அலுவலர், பணி தள பொறுப்பாளர்கள் மற்றும் சில அரசு அதிகாரிகளின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.


Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்