தமிழக அரசு வழங்கும் ரூ.1,00,000 ரொக்கத்தொகை – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன் !


 விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறந்த மூன்று விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

விவசாயிகளுக்கு பரிசுத்தொகை:

விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தோட்டக்கலையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ரொக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தோட்டக்கலை மற்றும்‌ மலைப்‌ பயிர்கள்‌ துறை சார்பில்‌ மானாவாரி பகுதிகளில்‌ தோட்டக்கலைப்‌ பயிர்கள்‌ சாகுபடி, வேளாண்மை ஆகியவற்றில்‌ சிறந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த பரிசு தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடைபெறும் இந்த போட்டியில் பல விவசாயிகள் பங்குபெற்று மூவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

மாநில அளவில்‌ தோட்டக்கலைப்‌ பயிர்கள்‌ சாகுபடி செய்து அதிக மகசூல்‌ பெறும்‌ சிறந்த விவசாயிகளுக்கு முதல்‌ பரிசு ரூ. 1,00,000 வழங்கப்படுகிறது. மேலும், இரண்டாம் பரிசு பெரும் விவசாயிக்கு ரூ. 60,000 ரொக்க தொகையும், முன்றாம் பரிசு பெரும் விவசாயிக்கு ரூ. 40,000 பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. மாநில அளவில் நடக்கும் இந்த சிறந்த விவசாயிகளுக்கான போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்‌. மேலும், இந்த விண்ணப்பத்தை விண்ணப்பிக்க ரூ.100 செலுத்த வேண்டும்.

இதே போல மாவட்ட அளவில் தோட்டக்கலை மற்றும்‌ மலைப்‌ பயிர்கள்‌ துறை சார்பில்‌ மானாவாரி பகுதிகளில்‌ தோட்டக்கலைப்‌ பயிர்கள்‌ சாகுபடி, வேளாண்மை ஆகியவற்றில்‌ சிறந்து விளங்கும்‌ விவசாயிகளுக்கு முதல் பரிசு ரூ. 15,000யும், இரண்டாம் பரிசு ரூ, 10,000யும், மூன்றாம் பரிசு ரூ.5,000யும் வழங்கப்படவுள்ளது. இன்றே இந்த விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடைசி தேதி என்பதால் இன்று மாலைக்குள் விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை