mParivahan ஆப் மூலம் புதிய டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்சி புக் நகல் பெறுவது எப்படி.?


 

நீங்கள் இரு சக்கர வாகனம் அல்லது 4 சக்கர வாகனம் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களிடம் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்சி புக் நகல் ஆகிய ஆவணங்கள் இருப்பது கட்டாயம்


நீங்கள் இரு சக்கர வாகனம் அல்லது 4 சக்கர வாகனம் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களிடம் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்சி புக் நகல் ஆகிய ஆவணங்கள் இருப்பது கட்டாயம் ஆகும். முன்பெல்லாம், இதை நீங்கள் பெறுவதற்கு ஏராளமான நடைமுறைகள் உண்டு. போக்குவரத்து அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால், இப்போது வீட்டில் இருந்தபடியே இவற்றை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

போக்குவரத்து துறை சார்பில் எம் பரிவாஹன் (mparivahan) என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதன் மூலமாக நீங்கள் விர்ச்சுவல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்சி புக் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் இதை எடுத்துச் செல்ல முடியும். விர்ச்சுவல் டிரைவிங் லைசென்ஸ் அல்லது ஆர்சி புக்கில் உள்ள க்யூர் கோடு உதவியுடன், அதிகாரிகள் அதனை சரிபார்த்துக் கொள்வார்கள். நீங்கள் ஒரிஜினல் ஐடியை கொண்டு செல்லும்போது அவை தொலைந்து விட வாய்ப்பு உண்டு. அதற்குப் பதிலாக இந்த டிஜிட்டல் ஐடிக்கள் போதுமானது.

  • உங்கள் ஃபோனில் பிளே ஸ்டோர் சென்று எம் பரிவாஹன் ஆப் நீங்கள் டவுன்லோடு செய்து, இன்ஸ்டால் செய்யவும்.

  • பரிவாஹன் ஆப்பில் ஆன்லைன் செர்வீசஸ் என்ற டேப் உள்ளே சென்று, டிரைவிங் லைசென்ஸ் தொடர்பான சேவைகள் என்பதை தேர்வு செய்யவும்.

  • எந்த மாநிலத்தின் கீழ் உள்ள சேவையை பெற விரும்புகிறீர்கள் என்பதை குறிப்பிடவும்.
  • இப்போது நீங்கள் புதிய பக்கத்திற்கு ரீடாரக்ட் செய்யப்படுவீர்கள். இங்கு உங்களுக்கு தேவையான சேவையை தேர்வு செய்து, அந்த நடவடிக்கையை நிறைவு செய்யலாம்.
  • உங்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் நகல் வேண்டும் என்றாலும், அதே டேப் கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் விவரங்களை கவனமாக குறிப்பிட்டு பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் டிரைவிங் லைசென்ஸ் பெறும்போது உங்கள் பயிற்சிக்கான லைசென்ஸ் நம்பர் கட்டாயம் இருக்க வேண்டும்.
  • இப்போது லைசென்ஸ் நம்பர் மற்றும் வாகனத்தின் பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிடவும்.
  • உங்கள் பிறந்த தேதியை சரி பார்க்கவும்.
  • இப்போது உங்கள் டிரைவிங் லைசென்ஸ் அல்லது ஆர்சி புக்-ஐ ஆப் காண்பிக்கும். அவற்றை எதிர்கால பயன்பாடு கருதி உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு பிறகு, போக்குவரத்து அலுவலகம் சென்
  • பெற்றுக் கொண்ட லைசென்ஸ் மற்றும் ஆர்சி புக் ஆகியவற்றை விர்ச்சுவல் ஐடி-யாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
  • \1\6சேமிக்கப்பட்ட ஆவணங்கள் உங்கள் டேஷ்போர்டில் இருக்கும். டிரைவிங் டெஸ்ட்-இல் பங்கேற்று நீங்கள் லைசென்ஸ் பெறலாம்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை