கிசான் விகாஸ் பத்திர திட்டம்: உங்கள் பணம் இரட்டிப்பாகும்!! 1 லட்சம் ரூபாய் 2 லட்சமாக மாறும்


 நீங்கள் கஷ்டப்பட்டு கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சிறந்த இடத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆம் என்றால், கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்யலாம் 

Post Office Kisan Vikas Patra Scheme: நீங்கள் கஷ்டப்பட்டு கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சிறந்த இடத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆம் என்றால், கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் (Kisan Vikas Patra Scheme) முதலீடு செய்யலாம். உங்கள் சேமிப்பின் பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால், இந்த திட்டம் உங்களுக்கு சிறந்தது என்பதை நிரூபிக்க முடியும். மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் பணம் மூழ்கிவிடும் என்பதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.


இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், நீங்கள் இன்று இதில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், முதிர்ச்சி அடையும் காலத்தில் ஒரு லட்சத்திற்கு பதிலாக இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும். அதாவது, உங்கள் முதலீடு எந்த நேரத்திலும் இரட்டிப்பாகும். இந்த திட்டத்தில் உங்கள் பணத்துக்கு முழு உத்தரவாதமும் மற்றும் இரட்டிப்பாகும். நீங்கள் ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும்.

அதேநேரத்தில் நீங்கள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், இந்த திட்டத்தில் மட்டுமே முதலீடு செய்யுங்கள். ஏனென்றால் 124 மாதங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகும். அதாவது, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள உங்கள் பணத்தை சுமார் 10 ஆண்டுகள் வைத்திருக்க வேண்டும். அதன் வட்டி விகிதம் 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வரை, அதாவது செப்டம்பர் 30 வரை 6.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தபால் சேமிப்பு (Post Office Scheme) பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் போது 18 வயது நிறமியிருக்க வேண்டும். இல்லை என்றால் தந்தை/ தாய் / சட்டப்பூர்வமான பாதுகாவலர் கீழ் இதில் முதலீடு செய்யலாம்.


18 வயது நிறம்பிய இந்தியர் யாரும் தபால் சேமிப்பு பத்திர திட்டத்தில் முந்தலீடு செய்யலாம். ஒற்றை கணக்கு (தனது பெயரில்) மற்றும் கூட்டு கணக்கு வசதி (தந்தை/ தாய் / மனைவி) உள்ளது. இந்த திட்டத்தில் ரூ.100 முதல் ரூ .1000, ரூ .5000, ரூ 10,000 மற்றும் ரூ .50,000 வரை முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டு செய்ய வரம்பு ஏதுமில்லை. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் போது KYC செயல்முறை பின்பற்றப்படுகிறது. சேமிப்பு பத்திர திட்டத்தில் சேர்வதன் மூலம் வருமான வரி சட்டப் பிரிவு 80சி கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது


Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்