கருவேப்பிலை சட்னி

இரத்த சோகை, கருப்பை கோளாறுகள், உடல் பருமன் என பல தொந்தரவுகளுக்கு சிறந்த சட்னி. சாதம், இட்லி, தோசை என அனைத்து உணவுகளுக்கும் சிறந்தது. பல சத்துக்களை கொண்ட சிறந்த இலை இந்த கருவேப்பிலை. அதிக பயன்களையும், நன்மைகளையும் கொண்டது இந்த கருவேப்பிலைவீட்டிலேயே இந்த கருவேப்பிலையை எளிமையாக வளர்க்கலாம். கருவேப்பிலையை பயன்படுத்தி அன்றாடம் கருவேப்பிலை ஜூஸ் செய்து பருக உடல்நலம் மேம்படும்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் கருவேப்பிலை
  • 4 ஸ்பூன்  நல்லெண்ணெய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 10 பூண்டு
  • சிறிது கொடம்புளி
  • உப்பு
  • கடுகு
  • ¼ ஸ்பூன் வெந்தயம்
  • 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 ஸ்பூன் மிளகு
  • 3 வரமிளகாய்
  • கொடம்புளி

    செய்முறை

    • ஒரு வாணலியில் வெந்தயம், உளுத்தம் பருப்பு, மிளகு, மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
    • பின் இவற்றை பொடித்துக்கொள்ளவும்.
    • பின் கருவேப்பிலையை கொடம்புளியுடன் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். 
    • சின்னவெங்காயம், பூண்டு ஆகியவற்றை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
    • ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு தாளித்து, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
    • பின்  அரைத்த கருவேப்பிலை விழுதை சேர்த்து கொதிக்க விடவும். 
    • நன்கு வரும் பொழுது பொடித்து வைத்திருக்கும் பொடிகளை சேர்க்கவும். 
    • சிறு தீயில் வைக்க வேண்டும். நன்கு சுண்டி வர வேண்டும். 
    • சுவையான சத்தான கருவேப்பிலை சட்னி ரெடி.
    • கருவேப்பிலை சட்னி

      இரத்த சோகை, கருப்பை கோளாறுகள், உடல் பருமன் என பல தொந்தரவுகளுக்கு சிறந்த சட்னி. சாதம், இட்லி, தோசை என அனைத்து உணவுகளுக்கும் சிறந்தது.
       ஆயத்த நேரம் : –10 minutes
       சமைக்கும் நேரம் : –15 minutes
       மொத்த நேரம் : –25 minutes

      தேவையான பொருட்கள்

      • 1 கப் கருவேப்பிலை
      • 4 ஸ்பூன்  நல்லெண்ணெய்
      • 10 சின்ன வெங்காயம்
      • 10 பூண்டு
      • சிறிது கொடம்புளி
      • உப்பு
      • கடுகு
      • ¼ ஸ்பூன் வெந்தயம்
      • 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
      • 1 ஸ்பூன் மிளகு
      • 3 வரமிளகாய்

      செய்முறை

      • ஒரு வாணலியில் வெந்தயம், உளுத்தம் பருப்பு, மிளகு, மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
      • பின் இவற்றை பொடித்துக்கொள்ளவும்.
      • பின் கருவேப்பிலையை கொடம்புளியுடன் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். 
      • சின்னவெங்காயம், பூண்டு ஆகியவற்றை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
      • ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு தாளித்து, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
      • பின்  அரைத்த கருவேப்பிலை விழுதை சேர்த்து கொதிக்க விடவும். 
      • நன்கு வரும் பொழுது பொடித்து வைத்திருக்கும் பொடிகளை சேர்க்கவும். 
      • சிறு தீயில் வைக்க வேண்டும். நன்கு சுண்டி வர வேண்டும். 
      • சுவையான சத்தான கருவேப்பிலை சட்னி ரெடி.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை