எழுத்து தேர்வு இல்லை.. நேர்க்காணல் மட்டும் தான்.. எஸ்பிஐ வங்கியில் வேலையை தட்டித்தூக்க நல்ல வாய்ப்பு

சென்னை: சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு சர்க்கிள்களில் Collection Facilitators பணிக்கு மொத்தம் 1438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு எழுத்து தேர்வு எதுவும் கிடையாது. நேர்க்காணல் மட்டும் உண்டு. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் முன்னணியில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் முறைப்படி நிரப்பப்பட்ட வருகின்றன.

அந்த வகையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பல சர்க்கிள்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் என்ன?

எஸ்பிஐ எனும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் Collection Facilitators பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் மொத்தம் 1438 பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. இதில் தமிழ்நாட்டின் சென்னை சர்க்கிளில் மட்டும் 33 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.


மாத சம்பளம் என்ன?

பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளம் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரை வழங்கப்படும். இந்த பணி நிரந்தரமானது அல்ல. இது ஒரு ஒப்பந்த பணியாகும். விண்ணப்பம் செய்ய விரும்புபவர்களின் அதிகபட்ச வயதாக 65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி உள்பட பிற பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி என்ன?

விண்ணப்பம் செய்பவர்களுக்கு கல்வி தகுதி என்று எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இருப்பினும் கூட விண்ணப்பத்தாரர்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் அதிகாரி அல்லது பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும்.


விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்பவர்கள் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்தாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்ய 2023 ஜனவரி மாதம் 10ம் தேதி கடைசி நாளாகும்.


பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here


பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here


Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்