இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், விஜயாபதி ஊராட்சி, கொத்தன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் வைத்து வட்டார அளவிலான குழந்தைகளுக்கான, மாணவ, மாணவியர்களுக்கான கல்வி மற்றும் திறமைகள் ஊக்குவிப்பு நிகழ்ச்சி DASU ( Dr. Ambedkar Association for societal upliftment) என்ற அமைப்பு சார்பில் நடைபெற்றது.இந்த விழாவில் குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி, சதுரங்கபோட்டி, கேரம்போட்டி, ஓவியபோட்டி, நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய கவுன்சிலர் ஆவுடைT.பாலன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி, போட்டிகளை துவங்கி வைத்தார், மேலும் கொத்தன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமார், DASU அமைப்பின் தலைவர் இசக்கியப்பன்,துணைத்தலைவர் ரவிச் சந்திரன் , இசக்கியப்பன், செயலாளர் ஜீவதாஸ்,
ஆலோசகர் மரியதாஸ் ஆசிரியர், முருகேசன், ஐயப்பன், அமைப்பு செயலாளர் கொத்தன்குளம் ஏசுராஜா,
ஜெய் பீம் அசோசியேசன் ஸ்டாலின், பாஸ்கர், பிரேம்ராஜ், சந்தனராஜ்,
வட்டார விவசாயிகள் சங்கத் தலைவர் சுந்தரம்,
வீட்டுவாரிய சங்கத் தலைவர் மின்னல்,
DYFI உதயம் சுரேஷ், இளைஞர்கள், பொதுமக்கள், பல்வேறு கிராம மாணவ, மாணவிகள் என ஏராளமானோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இராதாபுரம் DASU அமைப்பினர் செய்திருந்தனர்.
Tags
பொது சேவை