பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பாடல் வரிகள்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
                                          -  பிள்ளையார்
ஆற்றங்கரை ஓரத்திலே அ----ரமரத்து நிழலிலே
விற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
                                            - பிள்ளையார்
ஆனைமுகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர்
பானைவயிறு படைத்தவர் பக்தர் துயர் துடைப்பவர்
                                             - பிள்ளையார்
ஆறுமுக வேலனின் அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் தீர்த்து வைக்கும் பிள்ளையார்
                                             - பிள்ளையார்
மஞ்சளிலே செய்யினும் மண்ணினாலே செய்யினும் 
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் காட்டும் பிள்ளையார்
                                              - பிள்ளையார்
சங்கரனின் புதல்வனாம் சாத்திரத்தின் முதல்வனாம்
சகலத்திற்கும் மூலனாம் சக்திவாய்ந்த பிள்ளையார்
                                              - பிள்ளையார்
வன்னி மரத்து நிழலிலே வரங்கள் தரும் பிள்ளையார்
வில்வ மரத்து நிழலிலே வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
                                              - பிள்ளையார்
நெல்லி மரத்து நிழலிலே நின்றிருக்கும் பிள்ளையார்
பக்திதரும் பிள்ளையார் முக்திதரும் பிள்ளையார்
                                              - பிள்ளையார்
ஆதரிக்கும் பிள்ளையார் ஆனைமுகப் பிள்ளையார்
அருளை அள்ளித் தந்திடும் ஆண்டவனாம் பிள்ளையார்
                                               - பிள்ளையார்
அவல்பொரி கடலையும் அரிசிக் கொழுக்கட்டையும் 
கவலையின்றித் தின்னுவார் கண்ணை மூடித் தூங்குவார்
                                               - பிள்ளையார்
கலியுகத்தின் விந்தையைக் கான வேண்டி அனுதினம் 
எலியின் மீது ஏறியே இஷ்தம் போலச் சுற்றுவார்
                                               - பிள்ளையார்

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை