நேதாஜி ஓர் இடதுசாரி நேதாஜி மகள் அனிதா போஸ் கூறியுள்ளார்.

விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த பிரிட்டிஷ் அடிமைகளான ஆர்எஸ்எஸ் பரிவாரம், விடுதலையின் மகத்தான  நாயகர்களை எப்படியேனும் தங்களுடை யவர்களாக மாற்றி ஆதாயம் தேடிவிட முயற்சிக்கிறது. அதன் ஒரு பகுதியாக, இந்திய  விடுதலை இயக்கத்தின் மகத்தான தலைவர் களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு ஆர்எஸ்எஸ் அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு நேதாஜியின் மகளே சரியான, அரசியல் ரீதியான பதிலடி கொடுத்துள்ளார். நேதாஜியின் மகள் அனிதா போஸ், தற்சமயம் ஜெர்மனியில் வசித்து வருகிறார். அவர், நேதாஜி மதச்சார்பின்மையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் உறுதியும் வைத்திருந்தார்; ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பு அதற்கு நேர் எதி ரானது என்று சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்
நேதாஜியும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் எந்த விதத்திலும் நெருங்க முடியாத இருவேறு துருவங்கள்; இந்தியாவின் பல மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள், வாழ முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை வைத்திருந்த வர் நேதாஜி என்றும் அனிதா போஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
நேதாஜி ஓர் இடதுசாரி. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகிய அமைப்புகள் எந்தவிதத்திலும் நேதாஜியின் சிந்தனையை பிரதிபலிக்க முடியாது. நீங்கள் அவர் மீது உங்களுடைய முத்திரையை குத்திவிட்டு செல்ல முயற்சிக்கிறீர்கள். நீங்கள் வலதுசாரிகள். அவர் முற்றிலும் ஓர் இடதுசாரி” என்றும் அனிதா போஸ் கூறியுள்ளார். 
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126வது பிறந்த நாள், ஜனவரி 23(இன்று) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொல்கத்தாவில் ஆர்எஸ்எஸ் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேச இருக்கிறார். இதுகுறித்த தகவல் அறிந்தே, அனிதா போஸ் கொந்தளிப்புடன் பதிலடி கொடுத்துள்ளார்.
நேதாஜியின் பெயரைச் சொல்லி வெறுமனே வாயளவில் அவரது சிந்தனைகளைப் பேசுவ தாகக் கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆதாயம் தேட வேண்டாம் என்றும் உண்மையிலேயே நேதாஜி யின் சிந்தனையை தழுவுவதாக இருந்தால் ஆர்எஸ்எஸ் மதவெறியைக் கைவிட்டு மதச்சார்பின்மையை தழுவ வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளார். 
நேதாஜி மட்டுமல்ல, சுவாமி விவேகானந்தர் துவங்கி மாவீரன் பகத்சிங் வரை மனிதநேய சிந்தனையாளர்களையும் விடுதலைப் போராட்ட வீரர்களையும் ஆர்எஸ்எஸ் முன்னோடிகளைப் போன்று சித்தரித்து ஆதாயம் தேட முயலும் காவிக் கூட்டத்தின் இழி முயற்சிகள் தொடர் கின்றன. எத்தனை முயற்சிகள் மேற்கொண்டா லும் இந்தக் கூட்டத்தின் தலைவர்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புகோரி இந்தியாவுக்கே இழிவைத் தேடிய சாவர்க்கரும் தேசத் தந்தை மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சேயும் தானே! 

பதிவு தீக்கதிர் நாளிதழ்

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை