பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள முடிவுகளைக் கண்காணித்தல்1. பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாக தீர்மானப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல்.
3. சமூக தணிக்கைக் குழுவின் விவாத பொருள் / அறிக்கை உரிய ஆதாங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என சரிபார்த்தல்.
4. பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பெரும்பான்மையான அளவிற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதா என சரிபார்த்தல்.
5. விவாதப் பொருள் அனைத்தும் கூட்டத்தின் கலந்துரையாடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனவா என சரிபார்த்தல்.
6. துணைக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளைக் கண்காணித்தல்.
2.அனைத்துக் குழு உறுப்பினர்களும் உரிய காலத்தில் பயிற்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
3. வலுவிழந்த / செயல்படாத குழுக்களின் எண்ணிக்கை, செயல்படாததற்கான காரணம் மற்றும் தீர்வு மேற்கொள்ளப்பட்டதற்கான விவரங்களை வைத்து அக்குழுக்களை இயங்கச் செய்ய வேண்டும்.
செயற்குழு உறுப்பினர்களின் பணிகள்
கண்காணித்தல் பணியை பொதுவாக பொறுப்பாளர்களைக் கொண்டு மேற்கொள்ளச் செய்ய வேண்டும். பொறுப்பாளர்கள் முறையாக பிற அமைப்புகளை கண்காணித்து அறிவுரைகள் வழங்கிய விவரத்தினை செயற்குழுவில் பதிவு செய்ய வேண்டும்.குடியிருப்பு மன்றம் சுய உதவி குழுவிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை செயற்குழு கூட்டத்தில் வைத்து விவாதிக்க வேண்டும்.
ஒர் அமைப்பானது / நிறுவனமானது பல்வேறு செயல் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தும் போது அச்செயல்பாடுகளை தொடர் கண்காணித்து வழிப்படுத்தும் போதுதான் அச்செயல்பாட்டினால் நல்ல முறையில் விளைவுகள் / பயன்கள் ஏற்படுகிறது.
கண்காணிப்பதற்கான கீழ்வரும் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தலாம்:
அறிக்கைகள் பெறுதல்.களப்பார்வை
இடைநிலை மதிப்பீடு
ஆய்வுகள்
ஆவணப்படுத்துதல்
கண்காணித்தலின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
1. குடியிருப்பு மன்ற அளவில் தகுதி உள்ள அனைத்துக் குழுக்களும் குடியிருப்பு மன்றத்தில் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தல்2. குடியிருப்பு மன்ற செயல்பாடுகள் இலட்சியம் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் செயல்படுவதை தொலை நோக்குப் பார்வையுடன் கண்காணித்தல்
3. கூட்டமைப்பின் நோக்கங்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ள செயல்பாடு குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்தல்
4. நிறைவேற்றப்பட்டுள்ள செயல்பாடு வரையறுக்கப்பட்டுள்ள இலக்கு மக்களை சென்றடைந்தவற்றை உற்று கவனித்தல்
5. வரையறுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளின் அடிப்படையில் நிறை குறைகளை ஆராய்ந்து ஆய்வின் அடிப்படையில் குறை இருப்பின் தக்க ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுதல்
6. புதிய குழுக்கள் அமைத்தல் மற்றும் நலிவுற்றக் குழுக்களை வலுப்படுத்துதல் பற்றிய விபரங்கள் உள்ளாதா என கண்காணித்தல்
7. அனைத்துக் குழுக்களுக்கும் பயிற்சி, தரம் பிரித்தல், வங்கிக் கடன் இணைப்பு செய்யப்பட்டுள்ள விவரங்கள் அடங்கிய பட்டியல் சரிபார்த்தல்
8. சுய உதவி குழுக்களிலிருந்து பெறப்பட்ட கடன் மனுக்களை உரிய முறையில் பெறப்பட்டுள்ளதா என அறிதல்
9. குடியிருப்பு மன்ற அளவிலான மாதாந்திர அறிக்கை கூட்டமைப்பிற்கு முறையாக அனுப்பப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணித்தல்
10. கூட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் / தீர்மானங்கள் குழுக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தல்.
11. குடியிருப்பு வாரியாக தொழில் செய்திட வளங்களை வரிசைப்படுத்தி அடையாளம் கண்டறிந்தவற்றை கண்காணித்தல்
12. அனைத்து குழுக்களின் உறுப்பினர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதை குடியிருப்பு நிர்வாகிகள் உதவியுடன் கண்காணித்தல்
13. குழுக்கள் பெற்ற கடன் தொகையை தவணை தவறாமல் திரும்பச் செலுத்துவதை தொடர் கண்காணிப்பு செய்தல்
14. குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முறையான விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை கண்காணித்தல்.
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / குடியிருப்பு அளவிலான மன்றம் / சுய உதவி குழு செயல்பாடுகளை கண்காணித்தல்
கண்காணித்தல் :
கூட்டமைப்பு தங்கள் இலட்சியத்தை அடைவதற்காக திட்டமிடும் பணிகள் உரிய காலத்தில் பயனுள்ள வகையில் நிறைவேறியுள்ளதா என்பனவற்றை அறிந்து கொண்டு அவ்வப்போது தொடர் நடவடிக்கைகளை செய்து கொள்ளுதலே கண்காணிப்பு ஆகும்.
கடந்த கால கூட்டமைப்புகள், உறுப்பினர் குழுக்களை சரிவர நிர்வகிக்க இயலாத காரணத்தினாலும், தொடர் கண்காணிப்பு, மற்றும் வழிகாட்டுதல் இல்லாமையால் சுய உதவி குழுக்கள் செயல்பாட்டில் கூட்டமைப்பின் பங்கு மிகக் குறைந்தளவே காணப்பட்டது. மேற்கண்ட குறைகளை களைய, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், சுய உதவி குழுக்கள் மூலமாக கீழ்க்கண்ட செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
அவை:
1. கண்காணித்தல்2. வழிகாட்டுதல்
3. செயல்பாடுகளுக்குத் துணைபுரிதல்
கண்காணித்தல்
1. உறுப்பினர் குழுக்கள் முறையான வாரக் கூட்டங்கள் நடத்துவதையும், வார சேமிப்பு செய்வதையும் கண்காணித்தல்2. பதிவேடுகள் அனைத்தையும் முறையாகப் பராமரிப்பதைக் கண்காணித்தல்
3. குழுக்களின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணித்தல்.
2. பதிவேடுகள் பராமரித்தலில் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைக் களைய நடவடிக்கை எடுத்தல்.
3. உள் தணிக்கை மற்றும் வெளித் தணிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளைக் களையத் துணைபுரிதல்.
4. விருப்ப சேமிப்பு நிர்ணயிக்கப்பட்ட சேமிப்பு முறைகளை எடுத்துக் கூறி விருப்ப சேமிப்பு செய்யத் துணைபுரிதல்.
5. குழுக்கள் செய்யும் தொழில்களில் தொழில் நுட்பங்கள், தொழில் திறன்கள், மூலப்பொருட்கள் போன்றவை கிடைக்கத் துணை நிற்றல்.
6. குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கு விற்பனை வாய்ப்புகள் கிடைத்திட துணைபுரிதல்.
கூட்டத்திற்கு வருகை தரும் உறுப்பினர்கள் பல தகவல்களைப் பெறவும், விழிப்பிணர்வு அடையவும் வழி வகை செய்கிறது.
சேமிப்பு, தொழில் முனைப்பு போன்ற செயல்பாட்டிற்கு கூட்டம் மிகவும் அவசியம்.
திட்டமிட, ஆண்டுச் செயல் திட்டம் தயாரிக்க பெரிதும் உதவுகிறது.
உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்யவும், இணக்கமான அணுகு முறையைப் பெறவும் குழுக் கூட்டம் உதவிகிறது.
கிராம மேம்பாட்டிற்கும், சுய முன்னேற்றத்திற்கும், குழுக் கூட்டமே அடிப்படை.
சீராக, தொடர்ந்து குழுக் கூட்டம் நடத்தி முறையான தீர்மானங்கள் இயற்ற, ஏற்ற களமாக அமைவது குழுக் கூட்டமே.
வாரக் கூட்டம் நல்ல பலனைத் தரும்.
சுய உதவிக்குழு பொறுப்பாளர்களின்
அ. ஊக்குனர்களின் பெறுப்புகள் :
1. ஊக்குனர்கள், பொறுப்பு மிக்க தாயாக இருந்து, குழுவை கட்டிக் காத்தல்.
2. குழுவை முறையாக நடத்த, வேண்டிய வழிமுறைகளைக் கடைப்பிடித்தல்.
3. குழுக் கூட்டங்களை தவறாமல் நடத்துதல்.
4. குழுக் கூட்டங்களில் உறுப்பினர்கள் கலந்து கொள்ள ஊக்குவித்தல்.
5. உறுப்பினர்களிடையே நல்லுறவு மற்றும் ஓற்றுமையை மேம்படுத்துதல்.
6. குழுக் கூட்டத்தில் விவாதிக்கும் கருத்துகளையும், தீர்மானங்களையும் பதிவு செய்தல்.
7. குழுவின் பதிவேடிகளை முறையாக பராமரித்தல்.
8. குழுக் கணக்கினை ஆண்டு தணிக்கைக்கு ஏற்பாடு செய்தல்.
9. தணிக்கை மற்றும் தரம் பிரித்தலுக்குப் பிறகு அறியப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்தல்.
10. ‘கிராம சபா’ கூட்டங்களில் உறுப்பினர்கள் கலந்துக் கொள்ள ஆர்வமூட்டல்.
11. ’ஆண்டுச் செயல் திட்டம் ‘ தீட்டி செயல்பட ஊக்குவித்தல்.
12. பயிற்சியில் அறிந்து கொண்ட கருத்துகளை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளல்.
13. குழு வெளிக்கடன் பெற, கடன் பெறுவதற்கான மதிப்பீட்டிற்கு (Credit Rating) தயார் செய்தல்.
14. உறுப்பினர்களிடையே எண்ணறிவு, எழுத்தறிவினை மேம்படுத்துதல்.
15. பஞ்சாயத்து / வட்டார அளவிலான குழுக் கூட்டங்களில் கலந்துக் கொள்ள உறுப்பினர்களை தவறாமல் அனுப்புதல்.
16. குழுவின் நிதிநிலைமையை உறுப்பினர்களுக்கு அவ்வப்போது தெரியப்படுத்துதல்.
17. கிராம அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களின் ஓத்துழைப்பைப் பெறுதல்.
18. வங்கியின் உதவிகள், அரசு நலப்பணிகள் யாவும் பெற வழிவகை செய்கிறது.
2. சேமிப்பு, கடன்வசூல் இதர பிற பணத்தை வசூல் செய்தல், வங்கியில் செலுத்துதல்.
3. குழுவின் வங்கிக் கணக்கை ஊக்குனருடன் இணைந்து துவக்குதல்-இயக்குதல்.
4. குழு உறுப்பினர்களுக்கு ஏற்ற பொறுப்புகளைப் பகிர்ந்து அளித்தல்.
5. பயிற்சியில் பெற்ற கருத்துகளை உறுப்பினர்களிள் மத்தியில் பகிர்ந்து கொள்ளுதல்.
6. உறுப்பினர்களையும் பயிற்சியில், கூட்டங்களில் கலந்து கொள்ள ஆர்வமூட்டுதல்.
7. ஊக்குனர் இல்லாத நேரத்தில் அவரின் பொறுப்பை ஏற்று நடத்துதல்.
8. ஊக்குனருடன் இணைந்து குழுக் கணக்குப் பதிவேடுகளைப் பராமரித்தல்.
9. பெற்ற கடனை முறையாக பயன்படுத்தவும், திருப்பி செலுத்தவும் முன் மாதியாக இருந்து உறுப்பினர்களை ஊக்கப்படுத்துதல்.
10.பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வழி காட்டுதல்.
11. உறுப்பினர்கள் குழுவின் விதிமுறைகளை மீறாமல் பார்த்துக் கொள்ளுதல்.
12. குழுவின் பிரதிநிதியாக பஞ்சாயத்து / வட்டார அளவிலான குழுக் கூட்டமைப்புக் கூட்டங்களில் கலந்து கொள்ளுதல்.
13. அரசு மற்றும் பிற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நலத் திட்டங்களைப் பெற உறுப்பினர்களை ஆர்வ மூட்டுதல்.
14. சமூக மற்றும் கிராம வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த உறுப்பினர்களை ஒருங்கிணைத்து வழி நடத்துதல்.
15. குழுவிற்கு ஆதரவாகவும் நல்ல வழி நடத்துனராக செயல்படுதல்.
சேமிப்பு
சேமிப்பு என்ற சொல்லைச் சொல்லும் போதே ஏதோ ஓரு பூரிப்பு நம் மனதில் எழுகிறது! இன்று மகளிரின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதே மகளிர் சுய உதவி குழுக்கள்தான். குழுவாக சேமிக்கும் போது ஓரு முனைப்பும், நல்ல பிணைப்பும் உண்டாகிறது. பிறசேமிப்புகளில் உள்ள குறைபாடுகள் யாவை? குழுவாக சேமிப்பதில் நன்னைகள் யாவை? சிக்கனத்தை கடைப்பிடித்து, சேமிப்பு பழக்கத்தினை எவ்வாறு மேம்படுத்தலாம்
சிறுதுளி பெருவெள்ளம்!
சேமிப்பு இல்லாத வீடு கூரை இல்லாத வீடு…!
சேமிப்பே உங்கள் முதல் செலவாக இருக்கட்டும்!
இன்றைய சேமிப்பு நாளைய முதலீடு!
போன்ற வாசகங்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. பொதுவாக சேமிப்பின் அவசியத்தை உணராதவர்கள் யாரும் இருக்க முடியாது. சேமிப்பு என்பது கொஞ்சம் கொஞ்சமாக பொருளையோ, பணத்தையோ சேர்த்து வைத்து, இல்லாத நேரத்தில் அதை பயன்படுத்துவது. சேமிக்க தெரியாதவர்கள் எதிர்கால வாழ்கையில் அல்லல் பட நேரும்.
ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம்