பிரபல பண பரிமாற்ற செயலியான Phonepe தற்போது புதிய செய்தி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த செயலி மூலம் பயனர்கள் மளிகை, உணவு, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pincode செயலி:
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்ற செயலியான Phonepe அதிகமான பயனர்களை கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. தற்போது Phonepe தனது பயனர்களுக்கு உதவும் வகையிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கிலும் பின்கோடு என்ற ஷாப்பிங் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் வாயிலாக பயனர்கள் உணவு, மளிகை உள்ளிட்ட பொருட்களை பெறலாம். இந்த செயலி ONDC – ன் ஒரு பகுதியாக இயங்கி வருகிறது.
இச்செயலி முதல் கட்டமாக பெங்களூர் நகரத்தில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதில் நாளொன்றுக்கு 10,000 பரிவர்த்தனைகள் நடைபெறும் நிலையில் பின்கோடு செயலி மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயலி உள்ளூர் சில்லறை விற்பனையாளர்களை ஆதரித்து அவர்களின் வணிகத்தை ஊக்குவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் நடப்பு ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாளொன்றுக்கு 1 லட்சம் ஆர்டர்களை பெறுவதை இலக்காக கொண்டு செயல்படுவதாக Phonepe நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.