வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகா ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தீயணைப்புத் துறையினரால் வடகிழக்கு பருவமழை குறித்து விழிப்புணர்வு பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் தலைமை தாங்கினார்.
வள்ளியூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலைய அலுவலர் மாணவர்களுக்கு விரிவான விளக்கங்களுடன் அனைத்து தகவல்களையும் செய்து காண்பித்து விளக்கி பேசுகையில், குளங்களில் மாணவர்கள் குளிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
மழைக்காலங்களில் சாலைகளில் செல்லும்போது கவனமுடன் செல்ல வேண்டும். ஏனென்றால் மழைகாலங்களில் பாம்புகள் ஆங்காங்கே தெரியும் வாய்ப்பு உண்டு. அதனால் நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும்.

சாலைகளில் நடந்து செல்லும் போதும் , வாகனத்தில் செல்லும்போதும் கவனமுடன் செல்ல வேண்டும். மழைக்காலங்களில் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் 112 மற்றும் 101 என்ற இலவச எண்களில் உடனடியாக  அழைக்கலாம்.

மழை காலங்களில் மின்சார ஒயர்கள் ஆங்காங்கே அறுந்து தொங்கலாம் அவ்வாறு இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் அவற்றை தொடக்கூடாது என்று பேசினார்.   தீயணைப்பு குழுவினரால் ,  நீரில் தத்தளிப்பவர்களை எவ்வாறு காப்பாற்றி முதலுதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை செய்து காட்டி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
 

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை