Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க .

20 மார்., 2015



சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.

இதற்க்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட அக்கௌன்ட்டை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் Signoutகொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.


Report Compromised Account என வரும் விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.

Find Your Account என்ற  விண்டோவில் உங்கள் அக்கௌன்ட்டை திரும்ப பெற பல வசதிகள்(Email, Mobile, Number, Full Name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).  இங்கு  நீங்கள் பேஸ்புக்கில் வழங்கி உள்ள ஈமெயில் ஐடியை வழங்கவும். ஈமெயில் ஐடியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.

அடுத்து உங்களுக்கு Enter a Current or Old Password என்னும் இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நீங்கள் கொடுத்த ஈமெயில் ஐடியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும். உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த பாஸ்வேர்டை அந்த இடத்தில் கொடுக்கவும். பாஸ்வேர்டை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.

அடுத்த Reset Your Password விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Email me a link to reset my password  என்ற Radio பட்டனை தெரிவு செய்து Continue பட்டனை அழுத்தவும்.




Account Unlocked - Now You Can Log In என்னும் விண்டோ தோன்றும் அதிலே உள்ள Browse Facebook on a secure connection (https) whenever possible என்னும் ரேடியோ பட்டனை தெரிவு செய்து Log In பட்டனை அழுத்திவிட்டால் போதும் உங்களின் அக்கௌன்ட் திரும்ப பெறப்படும்.

இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட்டை எப்பொழுது போல உபயோகிக்கலாம்.. :)