கணினியில் இருந்து கண்களை எப்படி பாதுகாப்பது



வணக்கம் நண்பர்களே...ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவு எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களை சந்திப்பதில் இந்த பதிவு எனது ஆசிரியர் திரு.சக்தி அவர்களுக்கு சொந்தமானது  கடந்த மாதம் பெப்ரவரியில் எனக்கு  கண் வலி எடுக்க ஆரம்பித்து விட்டது எப்படியோ தாக்கு பிடித்து கொண்டு மருத்துவமனை சென்றேன் +0.25 பவர் அதிகமா  இருக்கு சொல்லி கண்ணாடி அணிய  சொல்லிட்டாங்க  பவர் குறையட்டும்  6   மாதம் வரை.......சரி எனக்கு ஏற்பட்டது காரணம் கணனி,தொலைபேசி பயன்படுத்தும் போது கவனம் செலுத்தாதது தான் ??????  நண்பர்களே   நீங்கள்  கண்களுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதிற்க்கு தான்  இந்த பதிவு...


பொதுவாக நாம் எல்லாவற்றையும் படிப்போம்,பார்ப்போம்,அறிவோம் ஆனாலும் அதை நடைமுறையில் கடைப்பிடிப்பதில்லை.

கணினி என்றதும் உடன் நமது நினைவிற்கு வருவது எல்லாவற்றையும் விட நமது கண்கள் தான்.கணினித் திரையும்,தொடர்ந்து கணினியை பார்ப்பதும் கண்களுக்கு மட்டுமல்ல கழுத்து,தோள்,முதுகு வலி மட்டுமல்ல உளவியல் பிரச்சனைகளையும் தந்து விடுகிறது.

சிலர் கண் பார்வையை இழந்தும் உள்ளனர். முக்கியமாக கணினித் திரையின் ஒளி,அதில் இருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சு பற்றி கவனம் செலுத்துவது நல்லதாகும்.


தலைவலி,கண் எரிவு,கண் களைப்படைதல்,மங்கலாக தெரிதல்,உற்றுப் பார்த்தல் போன்றவை ஏற்படுகிறது. 

கணினி பார்ப்பதால் கண்ணில் ஏற்படும் கோளாறுகளை(Computer Vision Syndrome – CVS) என்கிறார்கள்.இது ஒரு குறிப்பிட்ட ஒரு நோய் என்று சொல்ல முடியாது.


தவறான முறையில் கண்ணைப் பாவிப்பதால்,eyestrain ,வலி ஏற்பட்டு கண்களை தாக்குவதால் இப்படி சொல்லப்படுகிறது.

திரை 18 – 28 அங்குல தூரத்திலும்சிறிது கண் உயரத்தில் இருந்து தாழ்வாகவும்(திரையின் நடுப் பகுதியில் இருந்து 4-9 அங்குலம் வரை) இருப்பது சிறந்தது.


கண்  தசைகளுக்கும்  கண்களுக்கும்  ஓய்வு கொடுக்க 20-20-20 (RULE)  முறையை பயன்படுத்தலாம்...


v  அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 வினாடிகள் 20 அடி வரையிலான தூரம் வெளியே பார்த்து கண்களை சிறிது இரண்டு கைகளாலும் அழுத்தி பயிற்சி கொடுக்கலாம்.

v  கண்களை வலது மற்றும் இடது  புருவம் முற்றிலும் திசை திருப்பி உடற்பயிற்ச்சி  கொடுக்கலாம் .

v  மிதமான சுட தண்ணிர் மூலம் கண்களை கழுவவும் தண்ணிரை பளிச்சென்று தெளித்தபடி

v  கண்கள் காயாது இருக்க வேண்டியது அவசியம். கண்ணீர் வர வைக்க கண்ணாடி வகைகள்,contact lens களை சிலர் பாவிக்கிறார்கள்.இது கண்களைப் பாதுகாக்கும் ஒரு சிறந்த வழி.அம்மாவுக்கு வெங்காயம் உரித்துக் கொடுத்தாலே கண்ணீர் வந்து விடும்.கண்களை தேய்த்து விடுவதும் நல்லது.

v  கணினித் திரையின் ஒளியை ஓரளவு சம நிலைப்படுத்த ஒரு சிறிய நிரலியை வேண்டுமானால் பாவித்துப் பார்க்கலாம்.

v  இதை தரவிறக்கம் செய்த பின் வாழும் நாட்டின் இருப்பிடத்தை பாகை அளவில் கொடுத்து சேமித்தால்அந்த நாட்டு பகல் இரவு ஒளிக்கேற்ப தானாகவே சரி செய்து கொள்ளும். 
                   
             http://stereopsis.com/flux/                        தரவிறக்கம்




சாதாரணமாக புத்தகம் படிப்பது போல் அல்ல கணினியில் பார்ப்பது. பல விதமான படங்கள், வேறுபட்ட எழுத்துக்கள்,ஒளி இப்படி மாறுபட்டு வருவதால் தான் கண்கள் பாதிப்படைகின்றன. 

இதைவிட சாதாரணமாக நாம் கண்களை சிமிட்டுவது நிமிடத்திற்கு 12 தடவைகள் எனும் போது,கணினியில் வேலை செய்யும் போது குறைவாக.,4-5 தடவைகள் அல்லது ஒரு சில தடவைகளே கண்களைச் சிமிட்டுகிறோம்.இது கண்களைக் காய,dry, வைக்கிறது,சுமையைக் கொடுக்கிறது,கண்களின் தசைகளை சோர்வடையச் செய்கிறது.

இத்துடன் குருதி அழுத்தம் போல்,கண்ணில் அழுத்தம் ஏற்படுகிறது.இதை intraocular pressure என்கிறார்கள். பொதுவாக  12-22 mm Hg அல்லது 10 to 21 mmHgஎன்றிருக்கும்.இந்த அழுத்தம் அதிகரிக்கும் போது,கண்ணின் நரம்புகளை வலுவாகப் பாதித்து கண் துடிப்பு, அழுத்தம்சுமை ஏற்படுகிறது.

அதனால் கணினியில் வேலை செய்யும் போது பாதுகாப்பு முறைகளை கட்டாயம் கவனிக்க வேண்டும்.

அடிக்கடி ஓய்வு கொடுப்பது, வெளியே பார்ப்பது சரியான ஒளி, எழுத்துக்களின் அளவு என்பவற்றைக் கவனிக்க வேண்டும். கவலையின்மையால், பின்னர் கண்ணில் பாதிப்புக்கள் ஏற்படலாம்.

இந்த கஷ்டமான விஷயத்தில் இன்னொரு சந்தோஷமான விஷயம் எனக்கு வேலை கிடைச்சி  இருக்கு  Unitelworks Wireless Solution,Pvt ltd நிறுவனம்/
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்