காற்று சக்தியுடன் கூடிய டேட்டா சென்டரை அமைக்கவுள்ள பேஸ்புக் நிறுவனம்

காற்று சக்தியுடன் கூடியகூகுள் நிறுவனத்தைப் போன்று பல்வேறு முயற்சிகளில் சிரத்தை காட்டிவரும் பேஸ்புக் நிறுவனம் தற்போது காற்று சக்தியை அடிப்படையாகக் கொண்ட டேட்டா சென்டரை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் இந்த சென்டரை அமைக்கவுள்ளதாகவும், முற்று முழுதாக 100 சதவீதம் மீள் உற்பத்தி செய்யக்கூடிய காற்றிலிருந்து பிறப்பிக்கப்படும் மின் சக்தியின் உதவியோடு இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இத்திட்டம் இவ்வருடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள அதேவேளை இதற்காக காற்றின் மூலம் 200 MW மின்சக்தியை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை