ஆன்ட்ராய்ட் மொபைல் பாதுகாப்பானதா?


 ஆன்ட்ராய்ட் பற்றிய சிறு அறிமுகத்தை ஆன்ட்ராய்ட் என்றால் என்ன? என்ற பதிவில் பார்த்தோம். ஆன்ட்ராய்ட் சாதனங்களில் பல்வேறு பிரமிக்கும் வசதிகள் இருந்தாலும் அதிலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

Background Applications:

நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்களை விட்டு வெளியேறினாலும் அவற்றில் சில பின்புலத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இது Background Applicationsஆகும். இதனால் உங்கள் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடும். மேலும் உங்கள் மொபைலில் கட்டண இணைய வசதி இருந்தால் இந்த அப்ளிகேசன்கள் இணையத்தை தொடர்பு கொள்வதன் மூலம் உங்கள் பணமும் தீர்ந்துவிடும்.

பின்புல அப்ளிகேசன்களை நீக்குவது எப்படி?


ஆன்ட்ராய்ட் மொபைலில் Settings => Applications => Running Services என்ற பகுதிக்கு சென்றால் பின்புலத்தில் செயல்படும் அனைத்து அப்ளிகேசன்களின் பட்டியலை காட்டும். அதில் தேவையில்லாத அப்ளிகேசன்களை க்ளிக் செய்து, Stop என்பதை க்ளிக் செய்யவும். 

இயங்குதளம் தொடர்பான சில அப்ளிகேசன்களும் இருக்கும். அதனை நீக்கிவிட வேண்டாம்.

பின்புல அப்ளிகேசன்கள்களை செயல்படாமல் வைப்பது எப்படி?


ஆன்ட்ராய்ட் மொபைலில் Settings => Accounts & Sync என்ற பகுதிக்கு சென்றுBackground data traffic என்ற இடத்தில் டிக் மார்க்கை நீக்கிவிடுங்கள். இதனால் எந்த அப்ளிகேசனும் பின்புலத்தில் செயல்படாது. ஆனால் நீங்கள் உலவியில் இணையத்தை பயன்படுத்தலாம்.

Google Play (முன்பு Android Market) போன்ற சிலவற்றை பயன்படுத்த இந்த தேர்வினை டிக் செய்திருக்க வேண்டும்.

மொபைல்  இணைய இணைப்பை நிறுத்தி வைக்க:


மொபைல் இணைய இணைப்பை பயன்படுத்தாமல் Wi-fi மூலம் மட்டும் இணையத்தை பயன்படுத்துமாறு வைக்கலாம். 

Settings => Wireless & Networks => Mobile Networks என்ற பகுதிக்கு சென்று Data enabled என்பதில் டிக் மார்க்கை நீக்கிவிடுங்கள்.

டிஸ்கி 1: இதன் தொடர்ச்சியாக இலவச அப்ளிகேசன்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்