இக்கைப்பேசிகளில் காணப்படும் முக்கியமான பிரச்சனையாக தொடுதிரையினை பாதுகாத்தல் காணப்படுகின்றது.
இந்த பிரச்சனைக்கு தீர்வாக புதிய வகை பிளாஸ்டிக் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்பிளாஸ்டிக்கில் கீறல்கள் ஏற்படும்போது விசேட இரசாயனப் பதார்த்தம் ஒன்று இடுவதன் மூலம் குறித்த கீறல்கள் தானாகவே மாயமாகும்.
மேலும் 3 சென்ரி மீற்றர்கள் வரையான துளைகளையும் தானாகவே இல்லாமல் செய்யும் ஆற்றல் கொண்டது.
இதனை அமெரிக்காவின் Illinois பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.