ஆண்களின் உடலில் வளரும் முடிகளை நீக்க சில வழிகள்!!!

முடி என்பது அழகின் அம்சமாக அமைகிறது. ஆனால் அது ஒழுங்காக பராமரித்தால் மட்டுமே அழகு நிலைக்கும். அதனால் உடலில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒரு காலத்தில் உடம்பில் உள்ள முடியை பெண்கள் மட்டுமே நீக்கி கொண்டிருந்தனர். அது ஆணாக இருப்பின், அவர் ஒரு நீச்சல் வீரர் அல்லது தடகள விளையாட்டாளராக இருந்தால் மட்டுமே முடிகளை நீக்கி வந்தனர். மற்ற ஆண்கள் எல்லாம் செய்யவேமாட்டார்கள். ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. இன்று பல ஆண்கள் பெண்களை போல் உடம்பில் உள்ள முடிகளை எடுத்து, வழுவழுப்பான முடிகள் அற்ற உடலை பெற ஆசைப்படுகின்றனர். ஆனால் அவைகளை முழுமையாக நீக்க அவர்கள் நினைப்பதில்லை. மாறாக முதுகு, மார்பு, கால்கள் மற்றும் கைகளில் உள்ள ரோமத்தின் நீளத்தை குறைக்க ஆசைப்படுகின்றனர். அதில் நீங்களும் ஒருவரா? உங்களுக்காக நாங்கள் ஒரு 6 வழிமுறைகளை பற்றி விளக்கியுள்ளோம். அவற்றைப் படித்து பின்பற்றுங்கள். முடிகளை நீக்குதல் என்றால் பல பேருக்கு முதலில் மனதில் உதிப்பது வேக்சிங் தான். அதனுடன் சேர்ந்து நினைவுக்கு வருவது அதில் ஏற்பட போகும் வலியும் கூட. கண்டிப்பாக அது சுகமான அனுபவமாக இருக்காது,அதற்காக அது ஒன்றும் அவ்வளவு வேதனையையும் தராது. இருப்பினும். இது முடியை அதன் வேரிலிருந்து நீக்குவதால். இது சிறந்த வழிமுறையாக திகழ்கிறது. அதற்கு முடியை எடுக்க விரும்பும் இடத்தில் சூடான மெழுகை ஊற்றி, அதன் மீது ஒரு துணியை போட்டு நன்றாக தேய்த்து எடுத்தால், கையோடு முடிகளையும் நீக்கிவிடும். சுகரிங் என்பதும் வேக்சிங் போலத் தான். ஆனால் இதில் சர்க்கரை பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை, எலுமிச்சை, தண்ணீர் மற்றும் சிட்ரிக் அமிலம் கொண்டு பேஸ்ட் தயார் செய்யப்படுகிறது. இந்த வழிமுறைகளை திரும்ப திரும்ப பின்பற்றினால், முடிகளின் அடர்த்தி குறைந்து வேர்களும் வலுவிழந்து போகும். ஆண்களில் பெரும்பாலானோர் சீரான முறையில் ஷேவிங் செய்வதுண்டு அல்லது வாழ்க்கையில் ஒரு கட்டம் வரை அதனை செய்திருக்கலாம். உடலில் உள்ள முடியை நீக்க மிகவும் எளிய வழியாக ஷேவிங் செய்வது இருக்கிறது. உடம்பில் உள்ள எந்த பகுதியாக இருந்தாலும் சரி, அங்குள்ள ரோமங்களின் மீது ஷேவிங் க்ரீமை தடவி, ரேசரை வைத்து முடிகளை நீக்கி விடலாம். கண்டிப்பாக முடிகளை நீக்கும் வழிமுறைகளில் ஷேவிங்கிற்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால் ஷேவிங் செய்வதற்கு முன்பாக, ஷேவ் செய்ய வேண்டிய இடத்தை தண்ணீரில் நன்றாக நனைத்துக் கொள்ளவும். ஏனெனில் அது சரும துவாரங்களை திறக்க உதவும். மேலும் ஷேவ் செய்ய நல்ல தரமுள்ள ரேசர் மற்றும் ஷேவிங் க்ரீமை பயன்படுத்துங்கள். முக்கியமாக, முடி எந்த திசையில் வளர்கிறதோ, அந்த திசையை நோக்கி தான் ஷேவ் செய்ய வேண்டும். மிகவும் நுட்பமான முறையில் உடலில் உள்ள முடிகளை பராமரிக்க எலெக்ட்ரிக்கல் ட்ரிம்மரை பயன்படுத்துங்கள். உடலில் உள்ள ரோமங்களை புதிதாக எடுக்க தொடங்கியவர்களுக்கு, இந்த முறை பெரிதும் கை கொடுக்கும். இது ரேசரை போல் இல்லாமல், பாதுக்காப்பாகவும் எரிச்சலுமின்றி இருக்கும். மேலும் முடியின் நீளம் எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பதை இதனை கொண்டு சுலபமாக கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இது கண்டிப்பாக வழுவழுப்பான சருமத்தை ஏற்படுத்தி கொடுக்காது. இது மென்மையான தேகம் உடையவர்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த வழிமுறை. முடிகளை நீக்கும் க்ரீம்களை டெபிலாடோரீஸ் என்றும் அழைக்கப்படுகிறது. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான முடிகளை வலியில்லாமல் நீக்கும் வழி தான் இது. அதற்கு முடிகளை நீக்க வேண்டிய இடத்தில், இந்த க்ரீமை தடவி, 15-20 நிமிடங்கள் வரை தடவி, அதை அப்படியே விட்டு விட வேண்டும். இது முடியின் வேரில் உள்ள புரதத்தை நீக்கி, முடியை சுலபமாக நீக்கிவிடும். இருப்பினும் இவ்வகை கிரீம்கள் சருமத்தில் கடுமையாக நடந்து கொள்ளும். மேலும் அடர்த்தியான முடிகள் இருக்கும் இடத்தில், இது வேலை செய்யாது. ஒரு அறிவுரை- இந்த க்ரீமை பயன்படுத்தும் முன், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று, அந்த க்ரீமுடன் வரும் துண்டு வெளியீட்டில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பின் உடலில் ஒரு இடத்தில் கொஞ்சமாக தடவி, உங்களுக்கு இது ஒத்துக் கொள்கிறதா என்பதை பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள். லேசர் முறையில் முடியை நீக்கும் முறைக்கு. உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை ஒப்புதல் சான்று அளித்துள்ளது. இந்த முறைப்படி முடி நீக்கும் இடத்தில் லேசர் கதிர்கள் பாய்ச்சப்படும். இது மயிர்ப்புடைப்பை சூடாக்கி. அந்த இடத்தில் முடி வளர்வதை நிறுத்திவிடும். இந்த சிகிச்சையின் பலன், உங்கள் சரும நிறம் மற்றும் முடியின் நிறத்தை பொறுத்து மாறுபடும். அதனால் இந்த சிகிச்சைக்கு ஒத்து வருவீர்களா என்பதை முதலில் சோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த சிகிச்சை, முடிகளின் அடர்த்தி மற்றும் தரத்தை நிரந்தரமாக குறைப்பதால், இது விலை உயர்ந்த வழிமுறையாகும். மேலும் முடி நீக்கும் அனைத்து வழிமுறைகளுக்கும் இது தாயாக விளங்குகிறது. உடலில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் முடிகளை நீக்க வேண்டுமானால், லேசர் முறையை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் உடலில் சில பகுதிகளில் மட்டும் முடியை நீக்க வேண்டுமானால், வேக்சிங் முறையே சிறந்தது. இந்த முறைப்படி, ஒரு சிறிய மெலிதான ஊசியை கொண்டு, ஒவ்வொரு மயிர்த்தண்டிலும் நுழைத்து, ஒவ்வொரு மயிர்ப்பைக்கும் சிறிய அதிர்ச்சி அளிக்கப்படும். அதனால் முடி வளர உதவி செய்யும் அணுக்கள் அழிந்துவிடும். இந்த அணுக்கள் போய்விட்டால், இனி நிரந்தரமாக உங்களுக்கு அந்த இடத்தில் முடி வளராது. இதுவும் ஒரு நிரந்தர தீர்வாக அமையும். ஆனால் இதற்கு உத்தரவாதம் கிடையாது. மேலும் இதன் பலன் ஒவ்வொரு நபரை பொறுத்து மாறுபடும். நெற்றிப் பொட்டில் வளரும் ரோமம், கழுத்தின் பின் வளரும் ரோமம் மற்றும் இங்கும் அங்கும் வளர்ந்திருக்கும் முடிகளை நீக்க, இந்த முறை சிறந்ததாகும். இது விலை உயர்ந்த முறை மட்டுமல்லாது, அதிக நேரத்தையும் எடுத்துக் கொள்ளும். அதற்கு காரணம் உடலில் உள்ள ஒட்டு மொத்த முடியை நீக்க ஒரு வருடம் கூட ஆகலாம். ஆகவே, எந்த வழிமுறை உங்களுக்கு தோதாக அமையும் என்பதை நன்கு ஆராய்ந்து அதனை தேர்ந்தெடுங்கள்.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்