உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் அவ்வப்போது ஹாங் ஆகுதா? அப்ப உங்களுக்குதான் இந்த பதிவு. பொதுவா ஆண்ட்ராய்ட் மொபைலில் RAM (Random Access Memory) அதிகம் இருந்தால்தான் மொபைல் வேகமாக இயங்கும்.
ஒரு மொபைலை CPU-Z ஆப் மூலம் செக் செய்தால் பெரும்பாலும் 1GB RAM (1024 MB) என இருக்காது. 888MB தான் இருக்கும். அப்ப கிட்டதட்ட நான்கில் மூன்று பகுதிதான் இருக்கும். அதிலும் 80% மேல் பாவனை செய்தால் மொபைல் தானாகவே ஹாங் ஆக தொடங்கும்.
அதிலும் கேம்ஸ் விளையாட யாருக்குதான் ஆசை இருக்காது.? இந்த பிரச்சனையை சரி செய்ய கூடுதல் RAM தேவைப்படும். ஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி? இதுக்கு இரண்டு வழி இருக்கு. ரூட் செய்தவர்கள் ROEHSOFT RAM Expander என்ற அப்ளிகேஷன் மூலம் இன்று நாம் தர இருக்கிற புதிய அப்ளிகேஷன் மூலம் 4GB மெமரி கார்டை RAM ஆக மாற்ற முடியும். உங்கள் மொபைலை ரூட் செய்யவில்லையா? அல்லது பாதுகாப்பு காரணம் கருதி ரூட் செய்ய விருப்பம் இல்லையா? ஒன்றும் கவலையில்லை அதற்கும் ஒரு வழி இருக்கு