யூடியூப் வீடியோக்களை GIF ஃபைலாக மாற்றித் தரும் இணையதளம்

இப்பொழுது ஃபேஸ்புக் முதல் வாட்சப் வரை உள்ள சமூக இணையத் தளங்களில்GIF பைல்கள் பகிரபடுவது வாடிக்கையாகி வருகிறது. அத்தகைய படங்களை பார்ப்பதற்கு வேடிக்கையாவும் இருக்கும்.

அதே போன்று நீங்களும் GiF படங்களை மிக எளிதாக உருவாக்க முடியும்.வீடியோவிலிருந்து அது போன்ற படங்களை உருவாக்குவது மிக மிக எளிதானது.

யூடியூப் வீடியோவிலிருந்து GIF பைல்கள் உருவாக்குவது சுலபம்.  அதற்கென ஒரு சூப்பர் இணையதளம் உள்ளது.  GIFS.COM என்ற அந்த இணையதளத்தின் மூலம் எண்ணிலடங்கா ஜிப் பைல்கள் உருவாக்கலாம்.

இந்த இணையதளத்தில் வீடியோவை நீங்கள் அப்லோட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஜிப் பைல் உருவாக்க விரும்பும் வீடியோவின் URL கொடுத்தால் போதுமானது.







GIFS.com இணைய தளத்தின் மூலம் எப்படி GIF ஃபைல் உருவாக்குவது?



  • கீழுள்ள இணைப்பைச் சுட்டி gifs.com இணையதளத்திற்குச் செல்லவும்.
  • ஜிப் பைலாக மாற்ற வேண்டிய வீடியோவின் URL கொடுக்கவும்.

create gif image from video

  • யூ.ஆர்.எல் கொடுத்த பிறகு அந்த வீடியோ ப்ளே ஆகும்.
  • அதற்கு கீழே Start time இருக்கும். அதில் தொடக்க நேரத்தை கொடுக்க வேண்டும்.
  • (நான் உருவாக்கிய இந்த வீடியோவில் ஆரம்ப நேரம் 1.09. அதை கொடுத்தேன்.)
  • அதற்கடுத்து Duration Time கேட்கும். அதில் முடியப் போகும் நேரத்தை கொடுக்க வேண்டும்.
  • ஸ்டார்ட் டைம், duration time தெரிந்தால் கொடுக்கலாம். அல்லது அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவதன் மிக எளிதாக வீடியோவின் குறிப்பிட்ட பகுதியை ஆரம்பம் -  முடிவு நேரத்தை தெரிவு செய்துவிடலாம். 
  • ஜிப் பைலாக மாற தேர்ந்தெடுத்த பகுதி மட்டும் இப்போது ஸ்லைடர் லைனில் சிவப்பு நிறத்தில் தோன்றும். அந்த பகுதிதான் ஜிப் பைலாக மாறும்.

gif image creation online

gif image creation online

அந்த பகுதி மட்டும் வீடியோவில் Play ஆகும். சரியாக கொடுத்ததை உறுதி செய்த பிறகு,  கீழுள்ள Create என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

ஒரு சில நிமிடங்களில் ஜிப் பைல் உருவாக்கப்பட்டு விடும். அதை நீங்கள் Twitter, Instagram போன்றவற்றில் பகிருவதற்கான ஆப்சன் தோன்றும். விருப்பமிருந்தால் பகிரலாம். அல்லது no thanks கிளிக் செய்துவிடலாம்.

இப்பொழுது உங்களுக்கு தேவையான ஜிப் பைலுக்கான Link, Embed Codeகிடைக்கும். Embed Codeஐ காப்பி செய்து   பேஸ்புக், ட்விட்டர், ப்ளாக்கர் போன்றவற்றில் பகிர்ந்து கொள்ளலாம்.

இதுபோன்று ஆன்லைனில் யூடியூப் வீடியோவை தேவையான பகுதியை மட்டும் ஆன் லைன் வெப்சைட் மூலம் GiF பைலாக மாற்றலாம். அதை சமூக வலைத்தளங்களில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

புதியது பழையவை