கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்கள்
இங்குள்ள அரிய சிற்பங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நாயக்கர் ஆட்சி காலத்தில் கிருஷ்ணப்ப நாயக்கர் விஜயநகர பேரரசில் இருந்து இந்த சிலைகளை வாங்கியதாக கூறப்படுகிறது.
பூலித்தேவன் அரண்மனை
சுதந்திரப்போராட்ட வீரரான பூலித்தேவன் இந்த அரண்மனையை தலைமையகமாக கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்தான்.பாளையக்காரர்கள் வரலாற்றில் பூலித்தேவனுக்கு முக்கிய இடம் உண்டு.
ஆங்கிலேயர்களுக்கு சாமரம் வீசிய நவாப்களை எதிர்க்க பாளையக்காரர்களை ஒன்றிணைத்த பெருமை பூலித்தேவனுக்கு உண்டு. இவரது வெற்றிக்கு அடையாளமாக நவாப் தங்க வாளை பரிசளித்துள்ளார். ஆங்கிலேயர்களை முதன் முதலாக எதிர்த்த தென்னிந்திய மன்னர் என்ற பெருமை இவரையே சாரும். இவரது அரண்மனையை தமிழக அரசு நினைவு சின்னமாக பராமரித்து வருகிறது.
சங்கரநாராயணன் கோயில்
அரி பெரிதா அரன் பெரிதா என்ற சர்ச்சை எழுந்த போது உமா தேவி குழப்பமுற்றாள். ஒருபக்கம் அண்ணன்,இன்னொரு பக்கம் கணவன் யார் பெரியவர் என்று அறியும் பொருட்டு சிவபெருமானை நோக்கி ஒற்றை காலில் தவம் இருந்தாள்.இறைவனும் அம்பாளின் சந்தேகம் நீக்க அரியும் நானே அரனும் நானே என்று காட்சி தந்தார்.
ஆடித்தபசு திருநாளில் இறைவன் மாலையில் சங்கர நாரயணனாகவும், இரவில் சங்கரலிங்கமாகவும் காட்சி தருகிறார்.மிகவும் சிறப்பு வாய்ந்த இத்திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் கூடுவது தனி சிறப்பு.கோமதியம்மன் தலத்தில் தரப்படும் புற்றுமண்ணை நாள்தோறும் பூசி அணிபவருக்கு குன்ம நோய், வயிற்றுவலி முதலியனவும் தீராத பிறவிப்பிணிநோய்களும் தீர்கின்றன என்பது இத்தலத்து பக்தர்கள் கண்கூடாக கண்ட உண்மை.
இத்தலம் மகாகவி பாரதியாரால் பாடப் பெற்றதலம் என்பது குறிப்பிடத்தக்கது.பாரதியார் தோத்திரப்பாடல்கள் பகுதியில் கோமதியின் மகிமை என்ற தலைப்பில் இத்தலத்தின் பெருமைகளை பாடியுள்ளார்.
மாஞ்சோலை மலை பகுதி
ஏறக்குறைய 4 ஆயிரம் பேர் இங்கு வேலை பார்க்கின்றனர். ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களை போல இங்கும் நல்ல காலநிலை நிலவுகிறது.
மணிமுத்தாறில் இருந்து மாஞ்சோலை செல்லும் வழியில் உள்ள தாசன் குளம் மிக அழகான இடமாகும்.
பொட்டல்புதூர் தர்கா
புனித டிரினிட்டி கதீட்ரல் சர்ச் (ஊசி கோபுரம்)
64 அடி நீளம், 30 அடி அகலத்தில் கட்டப்பட்ட இந்த சர்ச் பின்னாளில் விரிவுபடுத்தப்பட்டது. பல்வேறு மதத்தை சார்ந்த மக்களும் இதற்காக நன்கொடை அளித்தனர். 1845ம் ஆண்டு 158 அடி உயரத்தில் கோபுரம் கட்டப்பட்டது. இந்த கோபுரம் ஊசி கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
குற்றாலம் :
இவற்றில் நீராடுவது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு தருகிறது. இந்த நீரில் மூலிகைகளின் குணம் இருப்பதால் மன நோய்க்கு மருந்தாக அமைவதாக கூறுவதுண்டு. ஆகஸ்ட் மாதம் அருவிகளில் நீர் வரத்து அதிகம் இருக்கும். தாமிர சபையும் இங்குதான் உள்ளது. மங்குஸ்தான், ராம்தான் போன்ற மலைகளில் இருந்து கிடைக்கும் பழங்கள் சீசன் நேரத்தில் கிடைக்கும்.
நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில்
இந்த கோயிலில் 2 கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்கள் ஆகமவிதிப்படி ராமபாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. 7ம் நூற்றாண்டில் நின்றசீர் நெடுமாறன் என்ற மன்னனின் ஆட்சியின் போது கோயிலின் முக்கிய பகுதிகள் மறு சீரமைக்கப் பட்டது. 1756ம் ஆண்டில் நுழைவாயில் அருகில் அழகான நந்தவனம் அமைக்கப்பட்டது. நூறு துண்களுடன் கூடிய மண்டபம் நந்தவனத்தின் நடுவில் உள்ளது. நெல்லையப்பர் கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட பெரியதாகும்.
முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம்
மாவட்ட அறிவியல் மையம்
சிறிய கோளரங்கம், டெலஸ்கோப் ஆகியவை இங்கு உள்ளன. மேலும் இங்கு கண்காட்சி, அறிவியல் நிகழ்ச்சிகள், வழிகாட்டி நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்படுகின்றன.
கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம்
சுமார் 35 வகையான பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. பறவைகளின் இனப் பெருக்கத்திற்கு இந்த கிராமம் மிகவும் அமைதியானதாகவும், நல்ல சீதோஷண நிலையும் இருப்பதால் பறவைகள் இங்கு வருகின்றன.