தமிழ் வலைப்பதிவுகள் பெருகிவரும் காலத்தில் வலைப்பதிவுகளை உருவாக்கி அதை அழகுபடுத்த பல பேர் முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே வலைப்பதிவை உருவாக்குவது முதல் அதை அழகுபடுத்துவது, பதிவை எப்படி வெளியிடுவது என உங்களது பல கேள்விகளுக்கு விடையளிக்கவே இந்த பிளாக்கர் பாடம். இதன் மூலம் தொடர்ந்து பிளாக்கர் சம்பந்தப்பட்ட பதிவுகளை இட்டு வலைப்பதிவை தொடங்கப்போகும் உங்களுக்கு ஒரு உதவி செய்யலாம் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை இடுகிறேன். இதற்கு வரவேற்பு இருந்தால் பிளாக்கர் பாடம் தொடரும்.
முதலில் எப்படி ஒரு வலைப்பதிவை உருவாக்குவது என்று பார்க்கலாம்..
வலைப்பதிவு என்பது கூகுள் தரும் இலவச சேவை. எனவே இதற்காக நீங்கள் பணத்தை செலவளிக்கவேண்டாம். உங்களுக்குத் தேவை ஒரு கூகிள் கணக்கு மற்றும் இணையத்துடன் கூடிய கணினி மட்டுமே.
பிளாக்கர் இணையதளத்தில் இருந்தே கூகுள் கணக்கை உருவாக்கமுடியும். ஒரு கூகுள் கணக்கை உருவாக்க இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்டதைப் போல் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உங்களுடைய ஈ-மெயில் முகவரி(email address), கடவுச் சொல்(password), உங்கள் வலைப்பதிவில் தெரிய வேண்டிய உங்கள் பெயர்(display name), உங்களுடைய பிறந்த தேதி, word verification போன்றவற்றை நிரப்புங்கள். உங்களுக்கு ஈ-மெயில் மூலம் புதிய தகவல்கள் வரவேண்டும் எனில் email notifications எனும் இடத்தில் டிக் செய்துவிட்டு, I accept terms and conditions என்பதில் டிக் செய்யுங்கள்.(Terms and Conditions பக்கத்தை படித்துவிட்டு டிக் செய்யவும்). அடுத்து CONTINUE என்பதை அழுத்தவும்.
உங்கள் விபரங்கள் சரியாக இருந்தால் அடுத்து உங்கள் வலைப்பதிவிற்கான தகவல்களை கேட்டு ஒரு விண்டோ திறக்கும். சரியாக இல்லையெனில் சரி செய்துவிட்டு CONTINUE அழுத்தவும்.
அதில் உங்கள் வலைப்பதிவின் தலைப்பு மற்றும் வலைப்பதிவு முகவரியை நிரப்புங்கள். நீங்கள் கேட்ட வலைப்பதிவு முகவரி இருக்கிறதா என்பதை உறுதி படுத்திக் கொண்டபின் CONTINUE அழுத்தவும். அது உங்களை அடுத்த் பக்கத்துக்கு அழைத்துச் செல்லும்.

அதில் உங்களுக்கு பிடித்தமான templateஐ தேர்வு செய்துவிட்டு CONTINUE என்பதை அழுத்தவும். உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் பின்னர் மாற்றிக்கொள்ளலாம். அதைப்பற்றி அடுத்துவரும் பாடங்களில் காண்போம். உங்களுக்கு வலைப்பதிவு தொடங்கப்பட்டதை உறுதி செய்யும் வகையில் ஒரு விண்டோ ஒப்பன் ஆகும். அதில் START BLOGGING
என்பதை அழுத்தியவுடன், உங்கள் வலைப்பக்கத்தின் posting பக்கத்திற்குச் செல்லும்.
அவ்வளவுதான். நீங்கள் ஒரு வலைப்பதிவை உருவாக்கிவிட்டீர்கள். இனி நீங்கள் கொடுத்த ஈ-மெயில் முகவரி மற்றும் கடவுச்சொல்லை வைத்து நீங்கள் உங்கள் பிளாக்கர் கணக்கை பராமரிக்கலாம். அடுத்த பதிவில் Dashboardஐ பற்றி பார்க்கலாம்..