ஸ்மார்ட் போன்கள்(Samsung, Blackberry, iphone), சைனா போன்கள்(Gfive, Lephone, tinmo), கம்பெனி தயாரிப்புகள் (Nokia, Sony Ericssion, HTC..) என Mobile Phone பயனீட்டாளர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அதிக விலை கொடுத்து போன்களை வாங்குகின்றனர். ஆனால் எல்லோரும் அவர்களுடைய செல்பேசிகளை சரியாக பராமரிப்பதில்லை. தண்ணீரில் குளிப்பாட்டுவது, கீழே போட்டு உடைப்பது, குழந்தைகளிடம் விளையாட கொடுப்பது போன்ற அத்தியாவசியமான செயல்களில் ஈடுபடுகின்றனர். செல்போன் மேற்கண்ட செயல்களின் பலனாக Repair ஆகிவிடும். அப்படியே அதை தூக்கிக் கொண்டு
Service Centerக்கு செல்வது, 1000 அல்லது 2000 தண்டம் கட்டுவது என்று பயனாளர்களின் காலம ஓடிக் கொண்டு இருக்கிறது.
அவ்வாறு எப்போதும் Service Center களையே நாடாமல் அவ்வப்போது ஏற்படும் சிற்சில பழுதுகளை நாமே எளிமையாக நீக்கலாம். Chip Level Service முறைகளை செய்ய நாம் முயற்சிக்க போவதில்லை. அதற்கென தனியாக திறமைசாலிகள் இருக்கிறார்கள். எளிமையான சில விசயங்களை கற்றுக்கொண்டால் சிறப்பாக பணத்தை நேரத்தை சேமிக்கலாம்.
1. தண்ணீரில் விழுந்துவிட்ட PHONE'ஐ முதலில் என்ன செய்யலாம்?
2. Switch ON ஆகாத போனை என்ன செய்யலாம்?
3. Display தெரியாத போனை என்ன செய்யலாம்?
4. Security Code Lock ஆன மொபைல் போனை எப்படி UNLOCK செய்யலாம்?
5. நம்முடைய Mobile Phone Original'லா?
இனிவரும் பதிவுகளில் எளிமையாக பார்க்கலாம். உங்களுடைய கைபேசியின் பிரச்சனை ஏதும் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.