கூகுள் எர்த் - நம் வீட்டினையும் ஊடுருவுமா? செய்தி சேகரிக்க....!

                
    கூகுள் மேப் (வரைபடம்) பற்றி பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள்...

    G.P.R.S வசதி கொண்ட சாதாரண java மொபைல் இருந்தால் போதும் உங்களால் உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் சந்து பொந்துகளில் நுழைந்து கூட சுற்றித்திரிய முடியும்.

    இது இருபரிமான வடிவமைப்பினைக் கொண்டது.. இதன் மூலம் விண்வெளியில் இருந்து பூமியை உற்று நோக்கினால் எப்படி தெரியுமோ அப்படிதான் உங்களின் அமைவிடங்களையும் நீங்கள் செல்ல விரும்பும் இடங்களையும் காண முடியும்.

    ஆனால் கூகுள் எரத் முப்பரிமாண அமைப்புடையது. இதன் அமைப்பு முறை சந்து பொந்துகளில் நாம் நடந்து செல்வது போன்றதொரு தோற்றத்தினை நமக்கு தருகிறது.

    உலகில் உள்ள எந்த ஒரு தனி நபரும் கூகுள் எர்த் மற்றும் கூகுள் மேப்ஸ் வழிகளை way to go வடிவமைப்பதும் படங்களை அல்லது வீடியோக்களை இணைப்பதும் முடியும். 


      ஸ்கெட்ச் அப் (Sketch Up) ஒரு முப்பரிமாண மாதிரிகளை உருவாக்கும் கட்டிடக்கலை வல்லுனர்கள் மற்றும் குடிசார் பொறியியலாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், விளையாட்டு மென்பொருட்தயாரிப்பாளர்கள் மற்றும் பல தொழில் சார் வல்லுனர்களால் பாவிக்கப்படும் மென்பொருளாகும்.


     இம் மென்பொருளானது மிகவும் வெளிப்படையானதும் மகிழ்ச்சியூட்டுவதும் நெகிழ்ச்சியானதுமான மென்பொருளாகும். ஏனைய முப்பரிமாண மென்பொருட்களைப் போலல்லாது இது இலகுவான இடைமுகத்தாலேயே பெரிதும் விரும்பப்படுகின்றது.
இதிலுள்ள முக்கியமான அம்சங்கள்...
  • இருபரிமாணத்திரையில் மவுஸ்ஸின் (Mouse) துணைகொண்டு முப்பரிமாண உருக்களை உருவாக்கும் வசதி
  • மவுஸ்ஸின் துணைகொண்டு இழுத்தல் தள்ளுதல் போன்ற செய்ற்பாடுகள் மூலமாக முப்பரிமாண உருக்களை உருவாக்குதல்
  • சூரியனின் நிழல் விளைவுகளை நிகழ்நேரத்தில் பார்க்கும் வசதி
  • வேகமானதும் இலகுவான முறையில் புகைப்பிடிப்புக்கருவி (கமரா) மற்றும் சூரியனின் நகர்வுகளைக் கணித்தல்.
  • மாதிரிகள் தனிப்பட்ட நிறமூட்டலுடன் பல்வேறுபட்ட நிறமூட்டல்களையும் மேற்கொள்ளவியலும்.

         ஸ்கெச்சப் ஸ்ராட்டப் நிறுவனத்தால் அறிமுகப் படுத்தப்பட்டது. இம்மென்பொருளின் வெற்றியானது ஏனைய மென்பொருட்களைப் போலல்லாமல் இலகுவாகக் கற்கக் கூடியதாக இருந்ததால் இதைப் படிப்பதற்கான நேரத்தைக் குறைத்து கூடுதலான நேரத்தை வரைபடங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த முடிந்தது.சரித்திரம்

மார்ச் 14, 2006 கூகிள் இந்நிறுவனத்தை உள்வாங்கிக் கொண்டது.

நீட்சிகள்

ஸ்கெச்சப் இணையத்தளத்தில் இருந்து நீட்சிகளைப் பதிவிறக்கம் செய்யமுடியும்

கூகிள் ஏர்த்

ஸ்கெச்சப்பின் குறிப்பிடத்தக்க நீட்சியானது முப்பரிமாண உருக்களை .kmz கோப்புக்களாக ஏற்றுமதி செய்யவியலும். இது பின்னர் கூகிள் ஏர்த் மென்பொருளில் திறக்கப் படக்கூடியது. எனவே உலகின் எப்பாகத்தில் கட்டிடம் அமையப் போகின்றது அதன் நிலத்தோற்றம் பற்றிய விபரங்களைச் சேகரிக்கவியலும்.


     தற்போதுவரை இந்த மென்பொருளானது கூகுள் நிறுவனத்தால் இலவசமாக பகிரபடாத நிலையிலும் இதன் பதிப்புகளை நம்மால் டொரன்ட் உதவிக் கொண்டு பதிவிறக்கம் செய்ய முடியும்.

            இப்போதே தொடங்கிவிடுங்கள் உங்கள் வேளையை உங்கள் சுற்று புற கட்டிடங்களையும் உங்களால் பெரிதும் ரசிக்கப்படும் கட்டிடங்களையும் உங்களின் ரசனைக்கேற்ப வடிவமைத்து கூகுள் எர்த் ல் அப்லோடு செய்திட... உலகம் அறியட்டும் உங்கள் திறமையை நம் நாட்டின் கட்டிடடக் கலையை...

தொழில் நுட்பத்தின் வியத்தகு வளர்ச்சியை கூகுள் எரத் மூலம் உங்களால் காண முடியும்... வாருங்கள் செயற்கை பூமியை வடிவமைக்க கைகொடுப்போம்.

அஞ்ச வேண்டாம்! கூகுள் எர்த் நம் அனுமதி இன்றி நம் வீட்டினுள் வராது... தன் ஊடுறுவலை நிகழ்த்த...  அதற்கு இன்னும் நூறு ஆண்டுகள் ஆகலாம்...! 

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை