#லண்டனில் #பிரதமர்மோடி பேச்சு ...!





நான் ஒரு சாமானியன் ...  கடின உழைப்பே என்னுடைய மிகப்பெரிய சொத்து...

நான் நேர்மறையாக சிந்திப்பவன் எதிர்மறையாக சிந்திப்பவனல்ல ...

#என்னுடைய வெற்றிக்கு மக்கள் தான் காரணம்...!

#மக்கள் நினைத்தால் #டீக்கடைக்காரர்களை கூட பெரிய ஆள்களாக மாற்றுவார்கள் ;

பிரச்சனைகள் லட்சக்கணக்கில் இருந்தால் அதற்கான தீர்வுகள் கோடிக்ககணக்கில் இருக்கிறது...

என் மீதான வசைகள், விமர்சனங்களுக்காக நான் சோர்ந்து போவதில்லை. விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். என் மீதான எதிர்மறை விமர்சனங்களையும் நான் வீணடிப்பதில்லை. அதிலிருந்தும் எதை கற்கலாம் என யோசிக்கிறேன்.

''நாட்டின், 125 கோடி மக்களில் ஒருவனான நான், மிகவும் சாதாரணமானவன். சிலருக்கு ஆசிரியர் பணி, சிலருக்கு மருத்துவர் பணி கிடைத்திருப்பது போல், எனக்கு பிரதமர் என்ற சேவகன் பணி கிடைத்துள்ளது.(மக்கள் கைதட்டல்) ''இதன் மூலம், நாட்டு மக்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,''

ஜனநாயக நாட்டில், மக்கள் சக்தியை விட மிகப் பெரிய சக்தி வேறு ஏதும் கிடையாது. ஒரு முறை ஓட்டளித்துவிட்டு, அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்கு, நமக்கு தேவையான அனைத்தையும், அரசு செய்யும் என நினைத்து, மக்கள் சோம்பேறியாக இருக்க கூடாது. நாடு என் சொத்து என, ஒவ்வொருவரும் உணர வேண்டும். நம் சொத்தை பாதுகாப்பது நம் கடமை. அதே போல், அரசை செயல்பட வைப்பதும், அரசின் திட்டங்களுக்கு கை கொடுப்பதும், ஒவ்வொரு குடிமகனின் கடமை. ஓட்டளிப்பதுடன் ஒருவரின் ஜனநாயக கடமை முடிந்து விடுவதில்லை.

நம் உறவினர்களுக்காக உழைக்கும் போது, அது நமக்கு சுமையாக தெரிவதில்லை. நாட்டின், 125 கோடி மக்களையும் என் குடும்பத்தினராகவே நினைக்கிறேன். எனவே, நாட்டிற்காக உழைப்பதில், எனக்கு எந்த சுமையும் தெரிவதில்லை. நான், அரசியல் குடும்ப பின்னணியிலிருந்து வந்தவன் அல்ல. எனவே, நாட்டிற்கு உழைக்கும் நோக்கத்துடன் மட்டுமே செயலாற்றி வருகிறேன்

என் இறுதி காலம் வரை, இதே போல், ஓடி, ஆடி, உழைத்தபடி இருக்க வேண்டும் என விரும்புகிறேன். என் உடல் ஆரோக்கியம் குறித்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அந்த ரகசியத்தை இப்போது கூறுகிறேன். நான், தினமும், ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரை, வசைகளை எதிர்கொள்கிறேன். (மக்கள் சிரிப்பு)

வரலாற்றில் எனக்கென தனி இடம் கிடைக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. பழம் பெரும் பெருமைகளை உடைய, இந்தியாவுக்கென சிறப்பான வரலாறு உள்ளது. ஏராளமான சான்றோர்களும், ஞானிகளும் நம் நாட்டில் பிறந்து, உலகிற்கு உபதேசம் செய்துள்ளனர். உலக நாடுகளை வழிநடத்தும் வல்லமை நமக்கு உள்ளது. நம் நாட்டின் பெருமையை, உலக அளவில் மேலும் சிறப்படைய செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். நம்மால், இந்த உலகிற்கே வழிகாட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

 #பிரதமர்மோடி
இலண்டன் மக்கள் மன்றத்தில் பேசியதின் ஒரு பகுதி மொழி பெயர்ப்பு...17.4.2018

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை