விபூதி எப்படி பூச வேண்டும், எப்படி பூசக்கூடாது….

திருநீறு இல்லாத நெற்றியும், நெய் சேர்க்காத உணவும் வீண் என்கிறார் அவ்வையார். திருநீறுக்கு விபூதி என்று ஒரு பெயருண்டு.‘
இந்துக்கள் ஒவ்வொருவரும் கடவுளை வணங்குவதன் அடையாளமாக தான் திருநீறு இட்டுக் கொள்கிறோம். திருநிறு பூசுவதால் ஐஸ்வரியம் கிட்டும் என்பது நம்பிக்கை. அதனால்தான் முன்னோர்கள் நீரில்லா நெற்றி பாழ் என்று கூறி உள்ளார்கள்.
விபூதி பூசும் போது கடைபிடிக்க வேண்டியவை:
ஒருவர் விபூதி தனது நெற்றியில் பூசும்போதுழ வடதிசை அல்லது கிழக்கு திசைநோக்கி நின்று கொண்டு பூச வேண்டும்.
அதே நேரத்தில் விபூதி கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து பார்த்து பூச வேண்டும்.
திருநீறை எடுக்கும்போது திருச்சிற்றம்பலம் என்றும், நெற்றியில் பூசும்போது சிவாய நம, அல்லது சிவ சிவ என்று திருநாமம் உச்சரித்துக்கொண்டே பூச வேண்டும்.
நெற்றில் ஒரு கோடாகவோ அல்லது 3 கோடாகவே பூசுதல் நலம்.
காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிப்பது உடலுக்கு ஆரேர்க்கியம்.

திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும் என்று திருமூலர் பாடி உள்ளார்…
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!
திருநீறு அணிவதால் செய்த பாவங்கள் நீங்கும் என்றும் திருநீறின் பெருமையை அறிந்து முறைப்படி அணியாமல் வெறுமனே பூசிக் கொள்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் சைவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.


விபூதி பூசும் போது தவிர்க்கப்பட வேண்டியவை:
புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் அணிய கூடாது
.தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் பூசக்கூடாது
ஒருவிரலால் கண்டிப்பாக எடுக்கவோ தரிக்கவோ கூடாது
பாவிகள் முன்பும் அசுத்த நிலத்திலும் வழி நடையிலும் பூச கூடாது
ஒரு கையால் வாங்கிய விபூதியும் தீட்சை பெறாதவர் தந்த விபூதியும் பூசலாகாது
சுவாமியை பார்த்துக்கொண்டும் திருநீறு கொடுத்த ஆசாரியாரை பார்த்துக்கொண்டும் அக்கினியை பார்த்துக்கொண்டும் ஆற்றைப் பார்த்துக்கொண்டும் பூசக்கூடாது.
திரும்பி எதிர் திசையில் பார்த்துதான் திருநீறு பூசவேண்டும்
வலது கை பூசும்போது இடது கை இடுப்புக்கு கீழ் தொங்ககூடாது
விபூதி வைத்திருக்கும் கலயத்தை கவிழ்த்து எடுக்க கூடாது
விபூதியை கீழே சிந்தக்கூடாது
கொடுப்பவர் கீழாகவும் வாங்குபவர் மேலாகவும் நின்று வாங்ககூடாது
திண்ணை ஆசனம் பலகை குதிரை சிவிகை இவற்றின் மீது அமர்ந்து வாங்ககூடாது
.ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்