ஸ்டெர்லைட் : பேரணியாக வந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தம்.. போலீஸ் தடியடி- மண்டை உடைப்பு!

தூத்துக்குடி
: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல முயன்ற பொதுமக்கள் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் தடையை மீற முயன்றதால் போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் பொதுமக்களில் பலருக்கு மண்டை உடைந்தது. தூத்துக்குடி நகரம் தற்போது போர்க்களமாகி உள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது.

இதையடுத்து இன்று முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

ஆனால் அவர்கள் ஆட்சியரகத்துக்கு ஒரு கி.மீ. முன்னதாக மடத்துக்குளம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். மக்கள் மதுரை- தூத்துகுடி புறவழி சாலையை பொதுமக்கள் நெருங்க முடியாத வகையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில் சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தினர். இதில் பொதுமக்கள் பலருக்கு மண்டை உடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீ வேனை கீழே தள்ளி கற்களால் தாக்குதல் நடத்தினர். தற்போது தூத்துக்குடி நகரமே போர்க்களமாக காட்சி தருகிறது.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை