கேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்...NiV..பாதுகாத்து கொள்வது எப்படி?

சென்னை: கேரளாவை மிரட்டும் நிபா வைரஸின் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி என மருத்துவர் பொன்மணி ராஜரத்தினம் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்க்கு கடந்த 18 நாட்களில் 15பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிபா வைரஸின் தாக்குதலால் கேரள மக்கள் மட்டுமின்றி, தமிழக எல்லையோர மாவட்ட மக்களும் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில் நிபா வைரஸின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது எப்படி என மருத்துவர் பொன்மணி ராஜரத்தினம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


கேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்...NiV

1998-1999 ஆண்டுகளில் மலேஷியாவில் தோன்றியது...
முதலில் பன்றிகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து பரவியது..வௌவால்கள்தான் மூல காரணி.. ...
மலேசியாவில் இந்த வைரஸ் தாக்கி இறந்தவரின் பெயரே இந்த வைரஸ்...

வௌவால் பன்றி போன்ற விலங்குகளின் சிறுநீர் எச்சில் போன்றவை மனிதர்களின் குடிநீர் உணவுப் பொருட்களில் கலக்கும்போது நோய் தாக்கும்.......நாம் தினமும் அணியும் ஆடை செருப்பு போன்றவற்றிலும் கூட இந்த வைரஸ் மறைந்திருக்கலாம்.......இது மிக வேகமாகப் பரவும் ஒரு தொத்து வியாதி......
அறிகுறிகள்.......
3-14 நாட்கள் காய்ச்சல்
தலைவலி
வாந்தி
மயக்கம்
மன உளைச்சல்
மனக்குழப்பம்
கோமா
இந்த 3 நாட்களில் கேரளாவில் 15 பேர் பலியாகியுள்ளனர் இந்த வைரஸுக்கு....அதில் 4 பேருக்கு வைத்தியம் செய்த ஒரு செவிலியரும் உண்டு....

கேரளாவை ஒட்டி இருக்கும் தமிழ் நாட்டின் எல்லைகள் மூலமாக இந்த நோய் தமிழகத்தை பாதிக்கும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன...
சுகாராதத்துறை தகுந்த நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறார்கள்....


நாம என்ன செய்யலாம்..?..
எங்கேயும் போகாதீங்க குடும்பத்தோடு...பிரயாணங்களைத் தவிருங்கள்....வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள்....தண்ணீரை கொதிக்க வைத்துக் குடியுங்கள்....மிருகங்களிடம் அவ்வளவாக ஒட்ட வேண்டாம்...செல்லப் பிராணிகளை தூரமாகவே வையுங்கள்......!!

ஆகிய அறிகறிகள் ஏற்பட்டு அது 24-48 மணி நேரத்துக்குள் மூளைக்காய்ச்சலாக மாறி உயிரைப் பறித்து விடும்...

மருத்துவம்.......
இதுவரை இந்த நோய்க்கு மருந்துகளோ மருத்துவமோ கண்டுபிடிக்கப் படவில்லை...ஆரம்பக் கட்டத்தில் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம்....காய்ச்சல் குறைவதால் நிபா வைரஸின் தாக்கமும் குறையும்....ஒரு தடுப்பூசியும் உண்டு...அது எவ்வளவு நம்மிடம் உள்ளது என்று தெரியவில்லை...


Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்