தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பேட்டி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தூத்துக்குடி சென்றுள்ள ரஜினிகாந்த் தற்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்!
துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இன்று காலை தூத்துக்குடி வந்தடைத்தார் ரஜினிகாந்த் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதியுதவியும், அதேபோல காயமடைந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் நிதியுதவி அளிக்கபடும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதில் அவர், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை சமூக விரோதிகளே என்றார்.
தொடந்து பேசிய அவர், சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடக்கி வைத்திருந்தார். சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும். ஆலையை திறக்க ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் நீதிமன்றம் சென்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது என்று கூறி வருகிறார்.
ஸ்டெர்லைட் நீதிமன்றம் சென்றால் அது மனித தன்மையற்ற செயல். தனி நபர் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்று தூத்துக்குடியில் சற்றுமுன்பு ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை எந்த அரசு வந்தாலும் திறக்கக்கூடாது. ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்கவேண்டும் என்ற எண்ணமே யாருக்கும் வரக்கூடாது என்றும் அவர்  தெரிவித்தார்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை