உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
உலர் திராட்சைப் பழங்களை எடுத்து நன்றாக கழுவி, பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைக்கவும். பின்னர் அதிலிருக்கும் பழங்களை சாப்பிட்டு, அந்த பாலை குடித்தால் மலச்சிக்கல் வராது. இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.
உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.
ரத்தசோகையை கட்டுப்படுத்தும்: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
காமாலை நோய் குணமடையும்: மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்