நாட்டின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ஆன பார்தி ஏர்டெல், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவுடன் சில கடினமான போட்டிகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை நாம் அறிந்ததே. அதன் ஒரு பகுதியாக, ஏர்டெல் அதன் ரூ.149/- திட்டத்த்தில், அதிரடியான ஒரு திருத்தத்தை அறிவித்துள்ளது.அந்த திருத்தும் என்ன? பழைய மற்றும் புதிய டேட்டா மற்றும் வாய்ஸ் நன்மைகள் என்ன? செல்லுபடியாகும் காலம் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோவின் போஸ்ட்பெயிட் திட்டம் அறிமுகமாகி சில தினங்களே ஆன நிலையில், ஏர்டெல் அதன் ரூ.149 திட்டத்தில் புதிய மாற்றங்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி, இனி ரூ.149/- திட்டத்தின் கீழ் 28 நாட்களுக்கு 28 GB அளவிலான 3G/4G டேட்டா கிடைக்கும்.இருப்பினும், இந்த திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது, ஆனால் ஏர்டெல் நிறுவனம் வரவிருக்கும் நாட்களில், இதை ஒரு திறந்த சந்தை திட்டமாக அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவான நன்மைகளை பொறுத்தவரை, ரூ.149 ஆனது 28GB அளவிலான டேட்டா நன்மைகளை மட்டுமின்றி, ஒரு நாளைக்கு 100 இலவச SMS மற்றும் 28 நாட்களுக்கு ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது.
முன்னதாக, ஒரு நாளைக்கு 100 இலவச SMS மற்றும் 28 நாட்களுக்கு ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன் 28 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 1GB அளவிலான 3G /4G டேட்டாவை மட்டுமே வழங்கியது என்பதும், இந்த மாற்றம் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.