ஊதா வண்ணத்தில் கூடிய புதிய 100 ரூபாய் தாளின் மாதிரியை இந்திய ரிசா்வ் வங்கி தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு வரை புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாது என்று திடீரென அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து புதிய இரண்டாயிரம் ரூபாய் தாள் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடா்ச்சியாக 500 ரூபாய், 50 ரூபாய் தாள், 10 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் புதிய 100 ரூபாய் தாள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அண்மையில் இந்திய ரிசா்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடா்ந்து இன்று புதிய ரூபாய் தாளுக்கான மாதிரியை ரிசா்வ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.
ஊதா வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ரூபாய் தாளின் ஒரு பக்கத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படமும், மறு பக்கத்தில் குஜராத்தில் உள்ள “ராணி கி வாவ்” குளமும் இடம் பெற்றுள்ளது. ராணி கி வாவ் குளம் இந்திய புராதாண சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.