பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாளை முதல் அமல்! மக்கள் மகிழ்ச்சி!

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளார். இந்த இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணையின் விலையின் பொறுத்து எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்ற முறை அமலுக்கு வந்ததையடுத்து, ஒவ்வொரு நாளும் அதன் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வரிசையில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், சமீப சில நாட்களாக ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவடைந்து வருகிறது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றார். இதில், எண்ணெய் நிறுவனம் ரூ.1 குறைக்க முன்வந்துள்ளன. பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படுகிறது. ஆக மொத்தமாக ரூ.2.50 குறைக்கப்பட்டுள்ளது என அறிவித்தார்.
மேலும், மாநில அரசும் வரியை குறைக்க முன்வர வேண்டும். அவ்வாறு குறைக்கும் பட்சத்தில் ரூ.5 வரை எரிபொருள் விலை குறையும் என்று கூறினார்.
தொடர்ந்து இந்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை