நாடு முழுவதும் அடுத்தாண்டு ஜூலை முதல் ஒரேமாதிரி ஸ்மார்ட் டிரைவிங் லைசென்ஸ்

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஸ்மார்ட் லைசென்ஸ், வாகன பதிவு சான்றிதழ்(ஆர்.சி) ஆகியவற்றை அடுத்தாண்டு ஜூலை மாதம் முதல் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களின் சொந்த டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களை வழங்குகின்றன. இவை பலவித வேறுபாடுகளுடன் இருப்பதால் அரசுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. நாட்டில் உள்ள 25 சதவீத ஓட்டுநர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட டிரைவிங் லைசென்ஸ் வைத்துள்ளனர். இதனுடன் ஆதார் இணைப்பதும் கட்டாயமாக்கப்படவில்லை. எனவே அடுத்தாண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஸ்மார்ட் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இவை ஒரு நிறத்திலும், வடிவத்திலும் இருக்கும். இதில் மைக்ரோ சிப் மற்றும் க்யூ.ஆர் குறியீடுகள் இருக்கும்.

இந்த ஸ்மார்ட் லைசென்ஸ் மூலம் ஓட்டுநர் பற்றிய முழு விவரத்தை போக்குவரத்து போலீசார் அறியலாம். ஓட்டுனரின் ரத்த வகை, உடல் உறுப்பு தான உறுதி மொழி உட்பட பல விவரங்கள் இதில் அடங்கியிருக்கும். இவற்றில் தேசிய மற்றும் மாநிலங்களின் முத்திரை பொறிக்கப்பட்டு, லைசென்ஸ் வழங்கும் அதிகாரியின் பெயரும் இடம் பெற்றிருக்கும். டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பவர்களுக்கும் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்கப்படும். இதேபோல் வானக பதிவு சான்றிதழும் ஒரே மாதிரியாக அச்சிட்டு வழங்கப்படும். மாசு கட்டுப்பாட்டு தர சான்று பிஎஸ்-4, பிஎஸ்-6 ஆகியவையும் இதில் குறிப்பிடப்படும்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை