கலிபோர்னியா: எது எதற்கோ வெப்சைட் உள்ள காலம் இது. காதலர்களுக்காக ஒரு வெப்சைட், திருமணத்திற்கு மாப்பிள்ளே, பெண் பார்ப்போருக்காக ஒரு வெப்சைட்.. இந்த வரிசையில் கள்ளக்காதலர்களுக்காகவும் ஒரு வெப்சைட் உள்ளது. அதை ஹேக் செய்து விளையாடியுள்ளனர் சில விஷமிகள்.
கிட்டத்தட்ட 4 கோடி உறுப்பினர்கள் உள்ள இணையதளம் இது. இந்த தளத்திற்குள் புகுந்த விஷமிகள் அதை ஹேக் செய்து அந்த இணையதள நிர்வாகிகளை அலற வைத்துள்ளனர்.
ஆஷ்லி மேடிசன் என்பது அந்த இணையதளத்தின் பெயர். உலகிலேயே முன்னணியில் உள்ள கள்ளக் காதல் இணையதளமாகும் இது. ஆனால் படு டீசன்ட்டாக கல்யாணமானவர்களுக்கான டேட்டிங் சைட் என்று பெயர் வைத்துக் கொண்டுள்ளனர்.
ஆஷ்லி மேடிசன்
அமெரி்க்காவைச் சேர்ந்த டேட்டிங் இணையதளம்தான் இந்த ஆஷ்லி மேடிசன். மிகப் பிரபலமான இணையதளம். திருமணமானவர்களுக்கான டேட்டிங் தளம்.
கள்ளக்காதலர்களின் இணைய சந்தை
திருமணமான பிறகு வேறு ஆண், பெண்ணுடன் டேட்டிங் என்றால் அதற்கு நமது ஊரில் கள்ளக்காதல் என்றுதான் பெயர். எனவே இதை கள்ளக்காதலர்களுக்கான டேட்டிங் சந்தை என்று கூப்பிடலாம்.
இந்த இணையதளத்தின் ஸ்லோகனே வாழ்க்கை மிகவும் சிறியது. உறவு வச்சுக்கலாம் வாங்க என்பதுதான். அந்த அளவுக்கு செக்ஸ் உறவுக்கான களமாக இந்தத் தளம் இருந்து வந்தது.
விஷமிகளின் திருவி்ளையாடல்
இந்த இணையதளத்திற்குள் சிலர் புகுந்து ஹேக் செய்து விட்டனர். அந்த இணையதளத்தில் இருந்த லட்சக்கணக்கான டேட்டாக்களையும் அவர்கள் திருடி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இணையதளத்தின் நிதி ஆவண தகவல்களையும் அவர்கள் திருடி விட்டனராம்.
இம்பாக்ட் டீம்
தங்களை இம்பாக்ட் டீம் என்று அடையாளம் காட்டிக் கொண்டுள்ள இந்த ஹேக்கர்கள், முக்கியமான தகவல்களைத் தாங்கள் திருடி விட்டதாக கூறியுள்ளது.
இப்ப ஓகே
ஆனால் தற்போது அந்த தளம் வழக்கமான செயல்பாட்டுக்குத் திரும்பியுள்ளதாக தள நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது வாடிக்கையாளர்களின் தகவல்களை பத்திரப்படுத்தும் வேலையில் இறங்கியிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.