வாட்ஸ்ஆப்பில் வரும் முக்கியமான மாற்றம்... என்ன தெரியுமா?

வாட்ஸ்ஆப்பில் ஒரு குறுஞ்செய்தியை 13 மணி நேரம், 8 நிமிடம் 16 நொடிக்குள் பெறவில்லை எனில் அதனை அனுப்புநர் டெலிட் ஃபார் எவ்ரிஒன் கொடுத்த பிறகு ரிவோக்(திரும்ப பெறுதல்) செய்ய முடியாதப்படி அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது. 
கடந்த டிசம்பர் மாதம் டெலிட் ஃபார் எவிரிஒன் என்ற வசதி கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நாம் யாருக்கேனும் தவறாக மெசேஜ் அனுப்பினால் அதனை அவர்கள் பார்ப்பதற்கு முன்பாக டெலிட் செய்து விடலாம். 
இந்த வசதியை பலரும் வரவேற்றனர். முன்னதாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு 420 நொடிகள் அல்லது 7 நிமிடங்களுக்கு டெலிட் செய்யலாம் என்ற வசதி இருந்தது. இன்னர் இந்த நேரம் 1 மணி நேரம் 8 நிமிடம் 16 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டது. 
அவ்வாறு டெலிட் செய்யப்பட்ட குறுஞ்செய்தியை பெறுநர் பார்ப்பதற்கு ரிவோக் ரெக்குவஸ்ட் வசதி பின்னர் கொண்டுவரப்பட்டது. 
இந்நிலையில் ரிவோக் ரெக்குவஸ்ட்டில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி 13 மணி நேரம், 8 நிமிடம் 16 நொடிக்குள் பெறுநர் அதனை பெறவில்லை என்றால் அதனை ரிவோக் செய்ய முடியாது. 
பெறுநரின் செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் இது பொறுந்தும். இது போல பல அப்டேட்ஸ்கள் வர உள்ளதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை