வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!

பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு அபராத் தொகையும் இல்லை.

பணம்.. அன்றாட உலகில் அவசியமான ஒன்று. ஆடம்பரம் தொடங்கி அடித்தட்டு மக்கள் வரை அனைவருக்கும் அடிப்படை தேவையான பணத்தை சேமிப்பது என்பது ஒரு கலை. எப்படி வேண்டுமானாலும் உழைத்து சம்பாத்தி விடலாம் ஆனால் அதை எப்படி பொறுப்பாக சேமிக்கிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்

சேமிப்பு என்றவுடன் பெரும்பாலான மக்களுக்கு ஞாபகத்தில் வருவது வங்கி சேமிப்பு தான். அந்த வங்கியிலும் எத்தனை சேமிப்பு கணக்குகள் உள்ளன, எதில் அதிகமான லாபம் கிடைக்கும் போன்ற பல விரிவான தகவல்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதிலும் எஸ்பிஐ, ஐசிஐசிஐ போன்ற வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்குகள் பொதுமக்களிடம் அதிகப்படியான கவனத்தை பெற்றுள்ளது,

உண்மையில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்றால் என்ன? அதில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்னென்ன? போன்ற பலவற்றை கீழே விரிவாக தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு இன்றைய காலக்கட்டத்தில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனை இல்லை. உங்களுக்கு தேவைப்படும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு அபராத் தொகையும் இல்லை.

1. ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தொடங்குபவர்களுக்கு ஏடிஎம் அட்டை, காசோலை, பாஸ் புக் போன்றவை இலவசமாக கிடைக்கின்றது.

2. ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டில் சம்பள கணக்கை வைத்திருப்பவர்களுக்கு பிரதான் மந்திரி ஜான் தண் யோஜனா (PMJDY) திட்டம் மூலம் பல சலுகைகள் வழங்கப்படுகிறது. இத்தகைய கணக்கைத் திறக்க, நீங்கள் அடிப்படையான KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

3. இந்த ஜீரோ பேலன்ஸ் கணக்கைத் திறக்கும்போது இணைய வங்கி சேவையானது ஆக்டிவே ஆகிவிடும்.உங்களுக்குத் தொழில்நுட்பம் மற்றும் இண்டர்நெட் பற்றித் தெரிந்திருக்காவிட்டால், வங்கி அதிகாரிகள் உங்களுக்கு உதவி புரிந்து இணைய வங்கி பற்றிய அனைத்து விபரங்களையும் விளக்குவார்கள்.

4.ஒரு வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பரிவர்த்தனை உங்களுடைய ஏடிஎம் கார்டுகளால் மேற்கொள்ளும் பொழுது அந்தக் கார்டு எவ்வித கட்டணமின்றி இலவசமாகின்றது.

5.ஜீரோ பேலன்ஸ் கணக்கிற்கான வட்டி பிற சதாரண வங்கி சேமிப்புக்கான வட்டி விகிதத்தை ஒத்து இருக்கும்
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்