ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 உதவித் தொகை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சிறப்பு உதவித்தொகைக்காக ரூ.1200 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள ஏழைத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்ட சபையில் இன்று பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 வது விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள் , நகர்ப்புற ஏழைகள், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் இந்த சிறப்பு உதவித்தொகை தமிழகம் முழுவதும் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது என்றும் இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் 35 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களும், நகர்புறங்களில் 25 லட்சம் தொழிலாளர் குடும்பங்களும் பயனடையும். இந்த சிறப்பு உதவித்தொகைக்காக 1,200 கோடி ரூபாய் 2018 - 19ம் ஆண்டின் துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர்  அறிவித்தார்

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை