நெல்லை மாவட்டம் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் 12 லட்ச ரூபாய் மதிப்பில் 2 ரத்த சுத்திகரிப்பு (டயாலிஸ் ) இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் ராதாபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை அவர்கள் துவக்கி வைத்தனர்.
முதன்முதலாக டயாலிஸ் செய்யும் போது ஒரு நபருக்கு 1 மணி நேரமாகும் , தொடர்ந்து டயாலிஸ் செய்யும் நபர்களுக்கு 4 மணி நேரமாகும். தற்போது 2 டயாலிஸ் இயந்திரம் உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த டயாலிஸ் பிரிவு செயல்படும். இதற்கு என்று ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது பகலில் மட்டும் தான் டயாலிஸ் செய்யப்படும். இனி வரும் காலங்களில் நோயாளிகளின் வருகை அதிகரிக்கும் போது இரவிலும் செயல்படும் என்று கூறப்படுகிறது.