ஜியோவின் அதிரடி அறிமுகம்: ஜியோபோன் 3 | ஜியோ பிக் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்.!

புதிய ஜியோ போன் 3, ஜியோ ஜிகா பைபர் திட்டம் மற்றும் ஜியோ டி.டி.எச் சேவைகளை என பல புதிய சேவைகளை வரும் ஜூலை மாதத்தில், ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யுமென்ற உறுதியான தகவல் 

தற்பொழுது வெளியாகியுள்ளது.
ஜியோ நிறுவனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் தனது புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகம் செய்யவுள்ளது.


ஜியோபோன்

2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜியோ வருடாந்த பொதுக் கூட்டத்தில், ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் வெறும் ரூ.0 என்ற நம்ப முடியாத விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சென்ற 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜியோ வருடாந்த பொதுக் கூட்டத்தில் ஜியோபோன் 2 உடன் ஜியோ ஜிகா பைபர் சேவை மற்றும் ஜியோ டி.டி.எச் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஜிகா பைபர் தொடக்கம்:
ஜியோ நிறுவனம் ஜியோ ஜிகாபைபர், "பைபர் டு தி ஹோம்" சேவையை மார்ச் மாத்தில் துவங்கப்போவதாக அறிவித்திருந்தது. ஆனால் தற்பொழுது ஜிகாபைபர் சேவையின் அறிமுகம் தள்ளி போகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி கட்ட சோதனையில் உள்ள ஜிகா பைபர் சேவை தள்ளிப் போவதினால் இன்னும் சில எதிர்பாராத விஷயங்களை ஜியோ செய்யக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோபோன் 3:
ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் 2 இன் வெற்றியை தொடர்ந்து ஜியோபோன் 3 மாடலை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. ஜியோபோன் 3, 2ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட 5' இன்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்படுமென்று தகவல்கள் கசிந்துள்ளது. 5 மெகா பிக்சல் பின்பக்க கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் முன்பக்க கேமராவுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ டி.டி.எச் சேவை:
ஜியோ நிறுவனத்தின் ஜியோ டி.டி.எச் சேவை பற்றிய முழு தகவல்கள் இன்னும் சரிவர தெரியவில்லை, இருப்பினும் நிச்சயம் ஜியோ நிறுவனம் பல புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அதன் வருடாந்த பொதுக் கூட்டத்தில் வாரி இறைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஸ்மார்ட்போன்:
ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கென புதிய ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கி வருவதாக அறிவித்திருந்தது. ஆனால் இந்த பிக் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் பற்றிய விபரங்களை இன்னும் ஜியோ நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும் இந்த வருடத்தின் ஜியோ வருடாந்த பொதுக் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்வியுடன் ஜியோ வடிக்கையளர்கள் ஜூலை வரை காத்திருக்க தான் வேண்டும் என்று ஜியோ நிறுவனம் சொல்லாமல் சொல்லிவிட்டது.
கட்டாயம் நீங்கள் அறிய வேண்டிய விபரங்கள்.!
ஜியோ ஜிகாஃபைபர் FTTH பிராட்பேண்ட் சேவைகள் கடந்த ஒரு வருடமாகப் பல அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. அதே நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ அதன் ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் பயனருக்கு வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது

ஜிகாஃபைபர்
ஆனால் சரியான அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இன்னும் வெளியிடப்படாத நிலையில், இந்தியாவில் மிக விரைவில் ஜியோ ஜிகாஃபைபர் இணைப்பு 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் நடைமுறைக்கு வரும் என்ற அதிகாரப்பூர்வ தகவலை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஃபைபர் இன் ஹோம் 2019
ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ஜியோ நிறுவனம் ஜியோ ஜிகாஃபைபர் "ஃபைபர் இன் ஹோம்" சேவைகளை அறிமுகப்படுத்தும் என்று ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜியோ ஜிகாஃபைபர் திட்டம்
ஜியோ ஜிகாஃபைபர் திட்டம் மற்றும் விலைகள் அறிவிக்கப்படாவிட்டாலும், தொடக்க ஜியோ ஜிகாஃபைபர் திட்டம் ரூ.500 என்ற விலையில் 100Mbps வேகத்தில் 300GB வரை டேட்டா வழங்கப்படும். அத்துடன் ஜியோ ஜிகாஃபைபர் ப்ரீவியூ திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் அனைத்து புதிய ஜியோ ஜிகாஃபைபர் இணைப்புகளுக்கும் முதல் மூன்று மாதங்களுக்கு 100Mbps வேகத்தில் இல் 100ஜிபி டேட்டா வழங்கப்படும்.

டெபாசிட் தொகை விபரம்
இணைப்புகளுக்குப் பயனர்கள் முதலில் ரூ.4,500 டெபாசிட் தொகை செலுத்த வேண்டும், இந்தத் தொகைக்கு திரும்பப்பெறக்கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதல் கட்டண தொகைக்கு ஜியோ ஜிகாஃபைபர் மற்றும் ஜியோ ஜிகா டிவி ரௌட்டர்கள் வழங்கப்டும், இவற்றிற்கான இன்ஸ்டாலேஷன் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது

ஜிகாஃபைபர்
ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளை ஆரம்பத்தில் 1,100 இந்திய நகரங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதே நேரத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக, ஜியோ ஜிகாஃபைபர் 700Mbps வரையிலான சராசரி வேகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளதென்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை