ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...? - முன்பதிவுக்கு முந்துங்கள்!

ஏத்தர் பேட்டரி ஸ்கூட்டரை ரூ. 4 ஆயிரத்துக்கு ஓட்டிச் செல்லும் வாய்ப்பை, அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்க அளித்துள்ளது. இதுகுறித்து விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம், பேட்டரியால் இயங்கும் ஏத்தர் ஸ்கூட்டரை கடந்த வருடம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 என இரு மாடலில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கின்றது. ஏத்தர் 340 மாடல் 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும், ஏத்தர் 450 மாடல் 1 லட்சத்துக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனைச் செய்யப்பட்டுகிறது.
ஏத்தர் 340 மாடல் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 60ல் இருந்து 70 கி.மீ., தூரம் வரை செல்லலாம். அதேபோல், ஏத்தர் 450 மாடலை முழுமையாக சார்ஜ் செய்யதால் 75 கி.மீ., தூரம் வரை பயணிக்கலாம். இந்த இரு ஸ்கூட்டருமே அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடியவை.
இந்த செயலி மூலம், அருகில் உள்ள சார்ஜிங் மையத்தையும் அறிந்துக்கொள்ளமுடியும். ஏத்தர் ஸ்கூட்டரானது தற்போது வரை கர்நாடக மாநிலம், பெங்களூருவில் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனம் மற்ற மாநிலங்களிலும் தனது காலடி தடத்தை பதிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
இதற்காக சென்னை, புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 'ஏத்தர் கிரிட்' எனப்படும் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ உள்ளது. இந்த நகரங்களைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் தனது விற்பனையைத் தொடங்கி விரிவாக்கம் செய்ய உள்ளது.
ஏத்தர் 450 ஸ்கூட்டருக்கு ரூ. 40 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை லீசுக்காக வசூலிக்கப்படுகிறது. அதேபோன்று, மாத வாடகையாக 4 ஆயிரத்து 220 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏத்தர் 340 ஸ்கூட்டரை வாங்குவதைப்போன்றே 450க்கும் முன்பதிவு மற்றும் சில ஆவணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
ஏத்தர் ஸ்கூட்டர்களை வாடகை மற்றும் லீசு முறையில் அறிவித்திருப்பது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த சலுகைகள் அனைத்தும் பெங்களூருவில் மட்டுமே என்பது நம்மில் பலருக்கு ஏமற்றத்தை அளிக்கும் ஒன்றாக உள்ளது.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை