வாட்ஸ் அப்’பில் சுய விவரங்களை பாதுகாக்க

ன்று வரை 700 மில்லியன் மக்கள் ஒரு மாதத்தில் ‘வாட்ஸ் அப்’ பயன்படுத்தி வருகின்றனர். அதில், ஒரு மாதத்தில் மட்டும் 30 பில்லியன் செய்திகள் பரிமாறப்படுகிறது. இந்த ‘வாட்ஸ் அப்’பில் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது சுய விவரங்களை பரிமாறிக் கொள்கின்றனர். இங்கு சாதாரணமாக பேசிக்கொள்வது மட்டுமின்றி புகைப்படம், வீடியோ, வங்கி கணக்கு விவரங்கள், தொடர்புகளும் தனிப்பட்ட வகையில் பரிமாறப்படுகின்றன.
இங்கு பிரைவசி இல்லாததால், சமூக வலைத்தளங்களில் உலவும் தீய எண்ணமுடையவர்கள் அதை தவறாக பயன்படுத்த முடியும். அதனால் ESET நிறுவனம், தங்களது சுய விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படாதவாறு பாதுகாக்க சில முக்கிய குறிப்புகளை அளித்துள்ளனர்.
1.) வாட்ஸ்அப் லாக்
வாட்ஸ் அப்-ஐ லாக் செய்வதில் முக்கியமான விஷயம் முதலில் ஒரு பாஸ்வேர்டு அல்லது ‘பின்’ பயன்படுத்துதலே சிறந்தது. வாட்ஸ் அப்பிற்கென பிரத்யேகமாக எந்த ஒரு லாக்கும் இல்லை. இதற்கென ஆப் லாக்கை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இதனால், மூன்றாவது மனிதர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். ஆனாலும், செல்போன் தொலைந்துபோகும் பட்சத்தில் அதை தவறாக பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ‘சாட் லாக்’, ‘வாட்ஸ் அப் லாக்’, ‘செக்யூர்சாட்’ இவை மூன்றையும் ஆண்ட்ராய்டு போன்களில் எளிதாக பயன்படுத்தலாம். எனவே இவற்றை பயன்படுத்தி யாரும் உங்களது தகவல்களை திருடாமல் பார்த்துக் கொள்ளலாம்.

2.) வாட்ஸ் அப் புகைப்படங்கள், போட்டோ ரோலில் சேர்வதை தடுக்க…

புகைப்படங்களை பரிமாறும்பொழுது, அவை பொதுவாக உங்கள் போட்டோ ரோலில் சேகரிக்கப்படுகிறது. அதனால் அவை திருடப்பட வாய்ப்புகள் அதிகம். இவற்றை ஐபோனில் எளிதில் தடுக்கலாம். போன் செட்டிங்கில் உள்ள மெனுவில் சென்று, பிரைவசியில் உள்ள புகைப்படத்தை ‘டீசெலக்ட்’ செய்ய வேண்டும். இதனால் அவை போட்டோ ரோலில் சேர்வது எளிதில் தடுக்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு பயனாளர்கள், இதனை ‘பைல் எக்ஸ்ப்லோரர் ஆப்’ மூலம் தடுக்கலாம். இதில், நோ மீடியா எனும் பைலை உருவாக்குவதின் மூலம் தடுக்கப்படுகிறது. வாட்ஸ் அப் இமேஜை லாக் செய்வது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கலாம். ஆனால், போன்கள் திருடப்படும்போது 100% பாதுகாப்பைத் தரும் என கூற முடியாது.
3.) லாஸ்ட் சீனை மறைப்பது
நீங்கள் கடைசியாக எப்போது ஆன்லைனில் இருந்தீர்கள் என மற்றவர்களுக்கு தெரியும். இது மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வழிவகை செய்யலாம். இந்த லாஸ்ட் சீன்  மற்றவர்கள் அறியாதவாறு தடுக்க ‘ஹைடு லாஸ்ட் சீனை’ பயன்படுத்தலாம். ஆனால் இதை செய்தால் உங்கள் தொடர்புகளில் உள்ளவர்களின் லாஸ்ட் சீனையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியாது.
4.) ப்ரொஃபைல் பிக்சரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க…
உங்கள் ப்ரொஃபைல் பிக்சரை நீங்கள் பயன்படுத்தும்போது அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு அதிகம். அதோடு இந்த ப்ரொஃபைல் புகைப்படத்தை பயன்படுத்தி கூகுள் சர்ச்சில் உங்களது விவரங்களை பெற முடியும். அதனால், பிரைவசியில் உங்கள் புகைப்படத்தை தொடர்புகளில் மட்டும் பொருத்த வேண்டும்.

5.) போலி தகவல்களிடம் விழிப்போடு இருங்கள் 

வாட்ஸ் அப் எப்பொழுதும் நேரடியாக உங்களோடு தொடர்பு கொள்வதில்லை என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள். வாட்ஸ் அப் நேரடியாக உரையாடல்கள், ஆடியோ தகவல்கள், புகைப்படங்கள், மாற்றங்கள், வீடியோக்களை எப்பொழுதும் மின்னஞ்சல் உதவியில்லாமல் உங்களுக்கு அனுப்பாது. குறிப்பிட்ட இலவச நன்கொடைகள் பற்றிய தகவல்கள் வந்தால் நிச்சயம் அது போலியாகத்தான் இருக்கும். இவை நம்பத்தகுந்தது அல்ல.

6.) தொலைபேசி தொலைந்தால் வாட்ஸ் அப்பை செயலிழக்கச் செய்யுங்கள்

செல்போன் தொலைந்தால், வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு எளிய மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. சிம் கார்டை லாக் செய்வது பற்றிய வசதிகளை அளிக்கறது. தொலைபேசி தொலைந்து போனால் உடனே அதே எண்ணில் மற்றொரு தொலைபேசியில் வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை திறந்தால் தானாகவே தொலைந்த வாட்ஸ் அப் அக்கவுண்ட் செயலிழக்கப்படும். இதன் மூலம் வாட்ஸ் அப் அக்கவுண்ட் தானாகவே செயலிழக்கப்படும்.

7.) எதைப்பற்றி பேசுகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள் 

இது கடைசி, இதுவே முடிவல்ல என்பதை உணர்ந்து செயல்படுங்கள். சுய தகவல்களை எப்பொழுதும் பகிர்வதை தவிர்த்திடுங்கள். முகவரி, தொலைபேசி எண், வங்கி விவரம், கிரெடிட் கார்டு விவரம், பாஸ்வேர்டுகளை வாட்ஸ் அப்பில் பகிராதீர்கள்.
8.) வாட்ஸ் அப்பை ‘லாக் அவுட்’ செய்ய மறக்காதீர்கள்:
வாட்ஸ் அப் தற்போது நிறைய சேவையை வழங்கி வருகிறது. பல பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் லாக் அவுட் செய்வது பற்றிய விவரம் தெரிவதில்லை. இதை தொலைபேசி மூலமோ பிரவுசர் மூலமோ செய்யலாம்.
உஷாராக இருங்கள்!

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை