வாட்ஸ் ஆப்பில் போலி செய்திகளை கண்டறிய சேவை எண்

சமூக வலை தளங்களில் மிக முக்கியமானதாக உள்ள "வாட்ஸ் ஆப்" செயலியை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் வாட்ஸ் ஆப் குரூப் மற்றும் Forward Message உண்மையான தகவலா? என்ற சந்தேகம் எழுந்தால் வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்தியர்களுக்கென்று பிரத்யேக சேவை எண் : +91-9643-000-888 என்ற எண்ணை அறிவித்துள்ளது. 

இதன் படி வாட்ஸ் ஆப் பயனாளர்கள் தங்களுக்கு வரும் தகவல் மற்றும் வீடியோக்கள் உண்மையானதா? என்ற சந்தேகம் எழுந்தால் இந்த வாட்ஸ் ஆப் சேவை எண்ணுக்கு தகவல் அனுப்ப வேண்டும் .

அதன் பின் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள வாட்ஸ் ஆப் குழு தாங்கள் அனுப்பிய தகவலை ஆராய்ந்து சமந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் சரியானதா? தவறானதா? என்பதை கூறும்.

மேலும் இந்திய வாட்ஸ் ஆப் சேவை எண் குழு ஆங்கிலம் , ஹிந்தி, பெங்காலி , மலையாளம் , தெலுங்கு உள்ளிட்ட ஐந்து  மொழிகளில் இயங்குகிறது.

எனவே வாட்ஸ் ஆப் பயனாளர்கள் இந்த ஐந்து மொழிகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி தங்களுக்கு வரும் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்