வாட்ஸப்பில் 24 மணி நேரத்தில் அதுவாகவே டெலிட் ஆகும் வகையில் அந்த ஆப் அப்டேட் செய்யப்பட்டு இருந்தது. மக்களை அதிக அளவில் பேஸ்புக் ஸ்டேடஸ்கள் போட வைக்கும் நோக்கத்தில் தான் இந்த அப்டேட் உருவாக்கப்பட்டது.
இதன் காரணமாக மக்கள் அதிக அளவான நேரத்தை வாட்ஸாப்பில் செலவிட காரணமாக இருக்கிறது. இது வந்த சில தினங்களிலேயே பலரும் நிறைய வாட்சப் ஸ்டேடஸ்கள் போட ஆரம்பித்தனர். அனைவரும் ரயில் போல நீளமாக தங்களது வாட்சப் ஸ்டேடஸ்களை அலங்கரிக்க தொடங்கினர். இதில் 30 செகண்ட் வீடியோக்கள் கூட போடா முடியும் என்பது கூடுதல் சிறப்பு.இந்நிலையில் அதனை பார்க்க நாம் ஸ்டேட்டஸை க்ளிக் செய்து அதன் பின்னர் தான் பார்ப்பது போல அமைந்திருக்கும்.
ஆனால் தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ள அப்டேட்டில் உடனடியாக எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்பதை காட்டும். மேலும், முன்னதாக டெலிட் மற்றும் பார்வேர்டு கீ உள்ளே சென்று க்ளிக் பார்க்க வேண்டியிருக்கும். தற்பொழுது ஸ்டேட்டஸ் வரிசையிலேயே இது வைக்கப்பட்டுள்ளது. பயனாளர்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் இது அமைந்துள்ளது.