Instant Money Order

 கணவரோ, மனைவியோ ,
நண்பரோ வெளியூர் செல்கின்றனர். அங்கே வேறு யாரும் அதிகம் பழக்கமில்லை, அங்கு திடீரென ஏடிஎம் கார்டு உட்பட பணப்பையை தவறவிட்டுவிடுகிறார்.           
இப்படி ஒரு சூழலை நினைத்துப்பாருங்கள்.
நீங்கள் அவருக்கு எப்படி இங்கிருந்தே உதவுவது.
மிகச்சுலபம், அருகில் உள்ள ஏதாவது ஒரு பெரிய தபால் நிலையம் செல்லுங்கள், அங்கே IMO (Instant Money Order) அனுப்பவேண்டும் என்று சொல்லுங்கள்.
விண்ணப்பத்தில், பெறுநர், அனுப்புநர் விபரம் மற்றும் அனுப்பவிரும்பும் தொகை மூன்றையும் நிரப்பி பணத்தை செலுத்தினால், உங்களுக்கு ஒரு சீல் செய்யப்பட்ட கவர் தரப்படும்.

வெளியே வந்து அந்த கவரை பிரித்தால் உள்ளே ஒரு 16 இலக்க எண் இருக்கும், அந்த நம்பரை உங்கள் கணவர் அல்லது மனைவிக்கு SMS  செய்யுங்கள், அந்த எண் என்ன என்று அந்த கவரை உங்களுக்கு கொடுத்த தபால்நிலைய ஊழியருக்கு கூட தெரியாது.

உங்கள் கணவர் அல்லது மனைவி தாங்கள் இருக்கும் ஊரில் உள்ள  தபால் நிலையத்துக்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தில் இந்த 16 இலக்க எண்ணை எழுதி கொடுத்தால் உடனே பணம் கொடுக்கப்படும்.
ரூ.1000 முதல் ரூ.50,000 வரை அனுப்பலாம்.     
இந்த சேவை இந்தியா முழுவதும் சுமார் 40,000 இடங்களில் உள்ளது, தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1500 கிளைகளில் இந்த சேவைகிடைக்கும்.     
  நம்மில் எத்தனை பேருக்கு இந்த விபரம் தெரியும்.
நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.பிறருக்கும் தெரியப்படுத்துங்கள்.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்