ஆபாச இணையதளங்கள் முடக்கம் ! என்ன காரணம் ?

உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி 827 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.
உலக அளவில் ஆபாச இணையதளங்கள் இயங்கி வந்தாலும் சில நாடுகளில் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆபாச இணையதளங்களும் இந்தியாவை மிகப்பெரும் சந்தையாக பார்க்கின்றன. இந்தியாவை குறி வைக்கப்பட்டு ஏராளமான இணையதளங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்தும் ஆபாச இணையதளங்களை முடக்குவது குறித்தும் நாடாளுமன்றத்தில் வாதிட்டப்பட்டு 2000க்கும் அதிகமான இணையதளங்கள் முடக்கப்பட்டன
இந்நிலையில் அனைத்துவிதமான ஆபாச இணையப்பக்கங்களையும் முடக்க வேண்டி உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் 857 ஆபாச இணைய தளங்களை முடக்கும்படி கடந்த மாதம் 27-ந் தேதி உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையதளங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. அதன்படி 857 ஆபாச இணைய தளங்களில் 827 இணையதளங்களில் மட்டுமே ஆபாச படங்கள் இருப்பதாகவும் அதனால் அந்த இணையதளங்களை முடக்க வேண்டுமெனவும் இணையதள வசதிகள் வழங்கும் அனைத்து தொலைபேசி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஜியோவில் கூகுள் க்ரோம் மூலம் ஆபாச இணையதளங்கள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேறு ப்ரவுஸ்கரில் சென்றால் இணையதளங்கள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படிப்படியாக எல்ல தொலைபேசி நிறுவனங்களும் ஆபாச இணையதள முடக்கத்தை செயல்படுத்தும் எனவும், அனைத்து ப்ரவுசர்களிலும் முடக்கப்பட்டால்தான் நீதிமன்றத்தின் உத்தரவு முழுமையான வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்