இந்த கேம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். தற்பொழுது இந்த பப்ஜி கேம் நிறுவனம், இந்தியாவில் அதன் லைட் வெர்ஷன் ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது.
லோ-வேரியண்ட் ஸ்மார்ட்போன்களில் பப்ஜி இன்று முதல் லோ-வேரியண்ட்(Low Variant) ஸ்மார்ட்போன் பயனர்களும் பப்ஜி கேம் விளையாட்டைத் தடை இல்லாமல் விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரத்தியேக பப்ஜி லைட் வெர்ஷன் தற்பொழுது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1,88,39,370 பயனர்கள் டவுன்லோட் ஒரிஜினல் பப்ஜி கேம் ஆப், ஹை-வேரியண்ட்(High Variant) ஸ்மார்ட்போன்களில் மட்டுமே எடுக்கும் படி உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கான முக்கிய காரணமாக இந்த கேமின் கிராபிக்ஸ் தரமும், கூடுதல் சேமிப்பு அளவும் சொல்லப்பட்டு வந்தது. இந்த பப்ஜி கேம்மை இதுவரை சுமார் 1,88,39,370 பயனர்கள் டவுன்லோட் செய்து விளையாடி வருகின்றனர்.
புதிய சந்தையில் கால்பதித்த PUBG டெவலப்பர்ஸ் டென்சென்ட் மற்றும் PUBG கார்ப்பரேஷன் இனைந்து இன்னும் இவர்கள் கால்பதிக்காத லோ-வேரியண்ட் ஸ்மார்ட்போன் கேமிங் சந்தையிலும் கால் பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தை உணர்ந்து, PUBG மொபைல் லைட் வெர்ஷனை உருவாக்கி இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
2 ஜிபி ரேம் இருந்த போதும் புதிய பப்ஜி மொபைல் லைட் வெர்ஷன் வெறும் 400 எம்.பி இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட்போன்களில் சிறப்பாக செய்லபடும் படி ஈந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2 ஜிபி ரேமிற்கும் குறைவாக உள்ள ஸ்மார்ட்போன்களிலும் கேம் விளையாடும் விதத்தில் லைட் வெர்ஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
10 நிமிடத்தில் சிக்கன் டின்னர்! புதிய பப்ஜி மொபைல் லைட் வெர்ஷன் 2 கிலோ மீட்டர் அளவு கொண்ட மேப் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய கேமில் அதிகப்படியாக ஒரு கேமிற்கு 100 நபர்கள் களத்தில் போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள். தற்பொழுது லைட் வெர்ஷனில் 60 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேப் மற்றும் போட்டியாளர்களின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதனால் 10 நிமிடத்தில் ஒரு முழு கேமும் நிறைவடைந்துவிடும்.
கூகுள் பிளே ஸ்டோர்: PUBG MOBILE LITE குறைந்த கிராபிக்ஸ், அதிக கட்டிடங்கள், அதிக லூட்டிங் என பல புதிய சேவைகளைக் குறைந்த நெட்வொர்க் உள்ள இடங்களிலும் சிறப்பாக எடுக்கும் படி இந்த புதிய பப்ஜி லைட் மொபைல் வெர்ஷனை பப்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பப்ஜி லைட் வெர்ஷன் பயன்படுத்த விரும்பும் பயனர்கள் PUBG MOBILE LITE என்று கூகுள் பிளே ஸ்டோரில் டைப் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.