நாடு முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் வைபை வசதி விரைவில் ஏற்படுத்தி தரப்படும் என மத்திய தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் சஞ்சய் சாம்ரோ தோட்டர் டில்லியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில் இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.மத்திய தொலைதொடர்பு மேம்பாட்டு மைய 36 வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது: பாரத் நெட் மூலம் 1 ஜிபிபிஎஸ் தொடர்பு மேலும் 10 ஜிபிபிஎஸ்சாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். பைர் மற்றும் கம்பி வழியாக நெட் இணைப்பை கொண்டு செல்வதில் கிராமங்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. இதனால் கிராமங்களில் வைபை வசதியை ஏற்படுத்த C-Sat-Fi technology (சேட்டிலைட்) மூலம் இணைய வசதி ஏற்படுத்தி தரப்படும்.
இதன்மூலம் கிராமங்களில் அனைவரும் வைபை வசதியை பெற முடியும். இது கிராமப்புற முன்னேற்றத்திற்கு பெரிதும் துணையாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இதன்மூலம் கிராமங்களில் அனைவரும் வைபை வசதியை பெற முடியும். இது கிராமப்புற முன்னேற்றத்திற்கு பெரிதும் துணையாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.