ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு.. அம்பாஸ்டர் காரின் புதிய அவதாரம்.

ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் கார் பிரபல ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் அழகிற்கே டஃப் கொடுக்கின்ற வகையில் மாறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம். மாடிஃபிகேஷன் உலகமே அசந்துபோகின்ற வகையில் டிசி2 நிறுவனம் பிரபல ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் காரை மாற்றியமைத்துள்ளது. இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மாடிஃபிகேஷன் நிறுவனங்களில் டிசி நிறவனமும் ஒன்று. இந்நிறுவனம், கார்களை மாற்றியமைப்பதைப்போல் அண்மையில் டிசி2 என தன்னை தானே மாற்றிக் கொண்டது.

இதைத்தொடர்ந்து, வாகனங்களையும் மிக ரம்மியமான தோற்றத்தில் அது மாடிஃபை செய்து வருகின்றது. மிக நீண்ட காலமாக இந்தியாவில் தன் சேவையைச் செய்து வரும் டிசி நிறுவனம் பழங்கால வாகனங்கள் முதல் சில இம்போர்டட் கார்கள் வரை மாடிஃபைச் செய்திருக்கின்றது. அந்தவகையில், சில பிரம்மிப்பூட்டும் வகையிலான மாடிஃபிகேஷன்களை அது செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்நிலையில், ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் காரை வாயைப் பிளக்கும் வகையில் மிகவும் ஸ்டைலிஷாக டிசி மாடிஃபை செய்துள்ளது. இந்த மாடிஃபிகேஷனால் பழங்கால அம்பாஸ்டர் கார், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு இணையாக மாறியிருக்கின்றது.

முக்கியமாக இந்த கார் மின்சார அவதாரத்திற்கு மாறியிருப்பது பார்வையாளர்கள் மற்றும் மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. அண்மைக் காலங்களாக மின்சார வாகனங்களுக்கான சந்தை விரிவடைந்து வருவதன் காரணத்தினாலயே டிசி நிறுவனம் அம்பாஸ்டர் காரை மின்சார ரகத்தில் மாடிஃபை செய்து, காட்சிப்படுத்தியுள்ளது.

இதற்காக, புதிய உடை தோற்றம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளிட்டவற்றை டிசி நிறுவனம் சேர்த்துள்ளது. ஆகையால், இது அம்பாஸ்டர் கார் தானா என்ற கேள்வியை நம் மத்தியில் கேட்க வைக்கின்ற அளவிற்கு மாறியிருக்கின்றது. குறிப்பாக, இதன் ரெட்ரோ ஸ்டைலிலான தோற்றம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்களின் பிரபல மாடல்களுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் உள்ளது.

இந்த ஆர்பரிக்கும் ஸ்டைலுடன் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கின்ற வகையில் ஏராளமான சொகுசு வசதிகளையும் டிசி இந்த காரில் புகுத்தியுள்ளது. இதனாலயே இந்த கார் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் காட்சியளிக்கின்றது.
புதியது பழையவை