Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

தடை ஆன சீன ஆப்’களுக்கு நிகரான இந்திய ஆப் பட்டியல்!

6 ஜூலை, 2020

இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆப்’களை இந்தியாவில் தடைசெய்ய இந்திய அரசாங்கம் உத்தரவிட்டது. டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்’களை மொபைல் மற்றும் மொபைல் அல்லாத இணையம் சார்ந்த சாதனங்களில் பயன்படுத்துவதை தடைசெய்தது இந்திய அரசாங்கம். இந்தியாவின் தரவுகளை இந்தச் செயலிகள் மூலம் சீனா பெறுவதாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்தே இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாகவும் ஊறுவிளைவிப்பதாகவும் இருக்கும் என்பதால் இந்தச் செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் சீன ஆப்களுக்கு நிகரான இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்’களின் பக்கம் மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்கும் இந்திய செயலிகளை பதிவிறக்கம் செய்யவும் பிரச்சாரங்கள் தொடங்கியுள்ளது. உலகத்தரத்தில் சீன ஆப்’களை பயன்படுத்திய இந்தியர்களுக்கு அதே அனுபவம் மற்றும் தரத்தில் இந்தியாவில் பல ஆப்’கள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டிய நேரம் இது. இதோ சீன ஆப்’களுக்கு நிகரான இந்திய ஆப்’களின் பட்டியலை அதன் செயல்பாடுகளுடன் தொகுத்து உங்களுக்கு வழங்குகிறோம்: இந்திய அரசு தடை செய்துள்ள 59 ஆப்களில் மிகவுன் பிரபலம் வாய்ந்தது மற்றும் அதிக பயனர்களைக் கொண்டது டிக்டாக் ஆப். இது சிறு வீடியோக்கள் பதிவு செய்யும் பொழுதுபோக்குத் தளமாகும். இந்த ஆப் மூலம் பலர் செலிபிரிட்டி ஆகி பல லட்சங்களில் வருவாயும் ஈட்டி வந்த நிலையில் இதன் தடை பெரிய பாதிப்பை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இனி கவலை வேண்டாம். டிக்டாக் இல்லைனா என்ன நம்ம ஊரில் தயாரிக்கப்பட்ட பல வீடியோ தளம் ஆப்’கள் பல இருக்கின்றன. தடை செய்யப்பட்ட சோஷியல் மீடியா மற்றும் பொழுதுபோக்கு சீன ஆப்’கள்- TikTok, Kwai, Helo, Likee, Weibo, Bigo Live, U Video, Hago, Vigo Video, Viva 1. Mitron Mitron ஆப், சிறு, குறு வீடியோக்களை இலவசமாக பதிவேற்றம் செய்ய உதவும் ஆப். இது சோஷியல் மீடியா போன்றும் செயல்படுகிறது. ‘மித்ரோன்’ செயலி அறிமுகமாகிய 2 மாதத்திலேயே 1 கோடி பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது. பெங்களுருவைச் சேர்ந்த நண்பர்கள் இணைந்து தொடங்கியுள்ள இந்நிறுவனத்தின் Mitron ஆப் கூகிள் ப்ளேஸ்டோரில் 4.5 ரேடிங் பெற்றுள்ளது. 2. Chingari இதுவும் கிட்டத்தட்ட டிக்டாக் போன்ற மற்றொரு இந்திய ஆப் தான். நண்பர்களுடன் வீடியோ பகிருதல், சேட் செய்தல், தங்களின் திறமைகளை பகிர்தல் என எல்லாம் இதில் சாத்தியம். இது ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, தமிழ், மலையாளம், தெலுங்கு என பல இந்திய மொழிகளில் உள்ளது. இதுவரை 25 லட்சம் டவுன்லோட்களுடன் வேகமாக வளர்ந்து வருகிறது இந்த ஆப். 3. Roposo Roposo ஒரு டிவி-யை போன்ற ஆப். இது 12 இந்திய மொழிகளில் உள்ளது. இந்தியா முழுவதுமுள்ள பயனர்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இந்திய செயலி இது. இத்தளத்தில் 14 மில்லியன் வீடியோ உருவாக்குபவர்களும், 80 மில்லியன் வீடியோக்கள் மாதம் இதில் பதிவேற்றமும் செய்யப்படுகிறது. இதுவரை 6.5 கோடி பதிவிறக்கங்களை பெற்றுள்ள பிரபலமான மேட் இன் இந்திய ஆப் இது. 4. ShareChat இது ஒரு இந்திய சோஷியல் மீடியா தளம் எனலாம். சீன நிறுவனம் பைட்டான்ஸ்-ன் ஆப் ஆன Helo இந்தியர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. குறிப்பாக தாய்மொழியில் படிக்க, எழுத விரும்புவோருக்கு ஏற்றத் தளமாக பல இந்திய மொழிகளில் இது இருந்தது. தற்போது இது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் இந்திய மாற்றாக ShareChat நிச்சயம் இருக்கும். தற்போது இந்த செயலி வேகமாக வளர்ச்சி அடைந்து 6 கோடி யூசர்களையும் 15 இந்திய மொழிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

செய்திகள் வழங்கும் சீன ஆப் UC News தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்று இந்தியா ஆப்’கள்: 5. Inshorts தேசிய, சர்வதேச செய்திகளை 60 வார்த்தைகளில் கொடுக்கும் நியூஸ் ஆப் இது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தற்போது இருக்கும் இந்த ஆப், 2013ம் ஆண்டு ஐஐடி மாணவர்கள் மூவரால் தொடங்கப்பட்ட இந்திய நிறுவனமாகும். 6. Lokal பெங்களுருவைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் Lokal உள்ளூர் செய்திகள், விளம்பரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை வெளியிடும் ஆப் இது. இது தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளிவரும் இந்திய ஆப். இந்த செயலி குறிப்பாக ஆந்திர பிரதேஷ், தமிழ்நாட்டில் 2ம் கட்ட, 3ம் கட்ட நகரம் செல்லும் ஹைப்பர்லோக்கல் ஆப் ஆன இது கிராமப்பகுதி மக்களிடையே பிரபலமாக உள்ளது. தடை செய்யப்பட்ட சீன ஆப்- Mi Video Call 7. Airmeet வர்ச்சுவல் மீட்டிங் ஆப் ஆன Mi Video Callக்கு மாற்றாக இந்தியாவில் உருவான Airmeet செயலியை பயன்படுத்தலாம். பெங்களுருவில் உருவான இந்த ஆப் $3 மில்லியன் முதலீட்டுடன் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகும். நிகழ்வுகளை ஆன்லைனில் பெரிய அளவில் நடத்த இந்த ஆப் உதவுகிறது. பல லட்ச பங்கேற்பாளர்களுடன் தரத்துடன், நல்ல இணைப்புடன் இயங்கக்கூடிய ஆப் இது என்பதால் நிறுவனங்கள் தங்களின் நிகழ்ச்சிகளை இங்கே நடத்தமுடியும்.

8. Leher இதுவும் லைவ் வீடியோ குழு விவாதம் நடத்த உதவும் ஆப். பெங்களுருவில் தொடங்கப்பட்ட இந்த ஆப் தற்போது தான் வளர்ந்து வருகிறது. இதுவரை 50 ஆயிரம் டவுன்லோட்களை பெற்றுள்ளது. இதே போல் Browsers; நாம் இணையத்தில் தேட விரும்பும், படிக்க விரும்பும் தளத்தை நாட உதவும் தளம் ஆகும். இந்த பகுதியில் தடை செய்யப்பட்ட சீன ஆப்கள்: UC Browser, CM Browser, Apus Browser, DU Browser. இதற்கு மாற்றாக இந்தியா ஆப்’கள் குறிப்பிடும்படி இல்லை என்றாலும் பிரபல பிரவுசர்கள்; கூகிள் க்ரோம், மோசில்லா ஃபயர்ஃபாக்ஸ் உள்ளன. இந்தப் பகுதியில் இந்திய நிறுவனங்கள் வர வாய்ப்புள்ளது. அதே போல் தகவல்கள், ஃபயில்கள் பகிர உதவும் சீன ஆப்கள் தடை செய்யப்பட்டது. அவை: ShareIt, Xender, ES File Explorer. இதற்கு மாற்றாக இந்திய ஆப்’கள் தற்போது இல்லை என்றாலும் கூகிளின் Files ஆப் உள்ளது. இது வேகமான, மிகவும் பாதுகாப்பான ஆப் ஆகும். தடை செய்யப்பட்ட மற்ற சீன ஆப்கள்: CamScanner, DU Battery Saver, Virus Cleaner, Parallel Space, DU Recorder, Clean Master. CamScanner-க்கு மாற்றாக இலவச ஸ்கானிங் வழங்கும் Notebloc ஆப் உள்ளது. ஆனால் இது ஸ்பெயினில் இருந்து உருவாகும் ஆப். தற்போதைக்கு மாற்றாக இந்திய ஆப் இல்லாத நிலையில் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலே குறிப்பிட்ட ஆப்’கள் பல இந்தியாவில் தயாராகும் சீன ஆப்களுக்கு நிகரானவை ஆகும். இன்னும் இவற்றைப் போன்ற பல ஆப்கள் ப்ளேஸ்டோரில் உள்ளது. இருப்பினும் இன்னும் பல செயல்பாடுகளுக்கு இந்தியாவில் உருவாக்கப்படும் ஆப்’களுக்கான தேவை இருந்து வருவதால் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்’களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.